அட்டகாசமான காமினேஷனான காலிஃப்ளவர் பிரியாணி, கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கப்
நறுக்கிய காலி ஃப்ளவர் – ஒரு கப்,
கார்ன் ஃப்ளார் மாவு – கால் கப்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
தனியாத் தூள் – அரை டீஸ்பூன்,
மாங்காய் துருவல் – கால் கப்,
பட்டை – ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று,
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
நெய் – இரண்டு டீஸ்பூன் ,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொதிக்கும் நீரில் நறுக்கிய காலி ஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும். அதனுடன் கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா கலந்த காலி ஃப்ளவரைப் பொரித் தெடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு… பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து.. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, தனியாத் தூள் சேர்த்து மாங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி சிறிது கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
கத்தரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிய துண்டு
கடலை எண்ணெய் – 3 மேஜை கரண்டி
மிளகு – 10
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கையளவு
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பொடிக்க வேண்டியவை:
வேர்க்கடலை – 2 மேஜைக்கரண்டி
எள் – 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பொடிக்க வேண்டிய பொருட்களை லேசாக வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும். கத்தரிக்காய்களை நான்காக வெட்டவும். காம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர் பக்கம் வெட்டவும். இப்படி வெட்டினால் கத்தரிக்காய் உடையாமல் இருக்கும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு விழுதுசேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, கத்தரிக்காய்களை போட வேண்டும். பின் தண்ணீர் ஊற்றி வெந்தவுடன், பொடித்து வைத்துள்ள பொடியினை கத்தரிக்காயில் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு உப்பு போடவும்.
பின்னர் சிறிய தீயில் வைத்து, எண்ணெய் தனியாக பிரிந்து வருவதே சரியான பதம் ஆகும். பிறகு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து கிளறிவிடவும். இப்போது இந்த கிரேவி யை பிரியாணி யுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமான காமினேஷனாக இருக்கும்.
