Monday, October 16, 2023
HomeHealthy Recipesசெட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் குழம்பு செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் குழம்பு செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் குழம்பு செய்வது எப்படி?

தமிழகத்தின் பாரம்பரிய சமையல் வகைகளில் செட்டிநாடு எப்போதுமே ஸ்பெஷல் ரகம் தான். செட்டிநாடு சைவ சமையலில் குழம்பு வகைகளுக்கென்றே ஒரு தனி சுவை இருக்கிறது. இன்று நாம் இத்தொகுப்பில் அப்படிப்பட்ட ஒரு குழம்பு வகையைத் தான் காண இருக்கிறோம்…

தெரக்கல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 3,
உருளைக்கிழங்கு – (பெரியதாக) 1,
தக்காளி – 1,
பெரிய வெங்காயம் – 1,

அரைத்துக் கொள்ள தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – 4,
காய்ந்த மிளகாய் – 6,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் – 1 மூடி,
முந்திரிப்பருப்பு – 2 நம்பர்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண – தேவையான அளவு.

தாளித்துக் கொள்ள:

நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 10 நம்பர் ,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பட்டை – 1 சிறிய துண்டு.

செய்முறை விளக்கம்:

முதலில் எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதன் பின்னர் தேங்காய் யை துருவிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். இப்போது ஒரு வாணலியைக் காயவைத்து, நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு ஸ்பெஷல் தெரக்கல் குழம்பு. இந்த குழம்பை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கான நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:

இந்த தெரக்கல் குழம்பில் கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 15 =

Most Popular