Sunday, October 15, 2023
HomeHealthy Recipesகவுனி அரிசு கொண்டு சுவையான இனிப்பு புட்டு செய்வது எப்படி?

கவுனி அரிசு கொண்டு சுவையான இனிப்பு புட்டு செய்வது எப்படி?

கவுணி (கவுனி) அரிசு கொண்டு சுவையான இனிப்பு புட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. கவுணி அரிசி புட்டு மாவு -1 கப்
  2. வெல்லம் துருவியது -1 கப்
  3. தேங்காய் துருவியது -1கப்
  4. ஏலக்காய் – 4
  5. கொட்டாங்கச்சி (மேல் பகுதி) – 1
  6. நெய் – 3 ஸ்பூன்
  7. உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கவுணி (கவுனி) அரிசி புட்டு மாவுடன் துளி உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீருடன் புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து அதில் துருவிய வெல்லம், நெய், ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். கொட்டாங்கச்சியின் மேல் பகுதியில் உள்ள 3 கண் உள்ள இடத்தில் ஒரு துளையில் சிறிது ஓட்டை போட வேண்டும். அடியில் சிறிது துருவிய தேங்காய் அதன் மேல் புட்டு மாவு மீண்டும் தேங்காய் சேர்க்க வேண்டும்.

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூட வேண்டும். மேலே வெயிட் போடுமிடத்தில் இந்த மாவு நிரம்பிய கொட்டாங்கச்சியை வைத்து 3 -5 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். வெந்தவுடன் தட்டில் கவிழ்த்து பரிமாற வேண்டும். வெல்லம் சேர்க்காமல் கடலைக் கறியுடனும் சாப்பிடலாம்.

மருத்துவ பயன்கள்:

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடியது.

உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளையும் அளிக்கிறது. இதில், அளவுக்கு அதிகமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனை, வாய்வு தொல்லை ஆகியவற்றை சரி செய்கிறது.

இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கவுணி அரிசியை எடுத்துக் கொள்ளலாம். கருப்பு கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால் வெள்ளை அரிசிக்குப் பதிலாக இந்த கருப்பு கவுனி அரிசியை தினந்தோறும் உணவாக பயன்படுத்தினால், நீரிழிவு பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது.

இந்த கருப்பு கவுனி அரிசியில் வைட்டமின் பி, இ அதிகளவில் நிறைந்துள்ளது. தசைப்பிடிப்பு, நரம்புகளுக்கு சிறந்த மருந்தாக இது உதவுகிறது.

இனிப்பு பொங்கல், இட்லி, சாதம், கஞ்சி, தோசை, புட்டு என்று உணவுகளை செய்து சாப்பிடலாம்.

RELATED ARTICLES

Most Popular