Saturday, October 28, 2023
HomeHealthy Recipesசத்தான பூண்டு மிளகு சாதம் செய்யலாம் வாங்க!

சத்தான பூண்டு மிளகு சாதம் செய்யலாம் வாங்க!

சத்தான பூண்டு மிளகு சாதம் செய்யலாம் வாங்க!

மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள தீமையை விளைவிக்கும் கிருமிகளை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுக்கிறது.

மிளகு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் மிளகை வைத்து பூண்டு மிளகு சாதம் செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி (சாதம்) – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – அரை டீஸ்பூன்,
கடலை பருப்பு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 10 பல்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லித்தழை- சிறிதளவு,
நெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் வெங்காயம் , கொத்தமல்லி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு அது உருகியதும், எடுத்து வைத்துள்ள கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அதன் கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இப்போது, பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் வடித்த , சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும். சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + eighteen =

Most Popular