Monday, October 23, 2023
HomeHealthy Recipesகாஷ்மீரி புலாவ் மற்றும் வெள்ளை குருமா செய்வது எப்படி?

காஷ்மீரி புலாவ் மற்றும் வெள்ளை குருமா செய்வது எப்படி?

ஹெல்த்தி லன்ச் பாக்ஸ் ரெசிபி!
காஷ்மீரி புலாவ் மற்றும் வெள்ளை குருமா செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1/2 கிலோ,

நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,

நறுக்கிய பைனாப்பிள் – 1/2 கப்,

சீட்லெஸ் கறுப்பு திராட்சை – கால் கப்,
சீட்லெஸ் பச்சை திராட்சை – கால் கப்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

பட்டை – 2 நம்பர்,
லவங்கம் – 2 நம்பர்,
ஏலக்காய் – 2 நம்பர்,
பிரிஞ்சி இலை – 2 நம்பர்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு,

எண்ணெய் – தேவையான அளவு,

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,

தண்ணீர் – 600 மில்லி,

உப்பு – தேவையான அளவு .

செய்முறை விளக்கம்:

எடுத்து வந்திருக்கும் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலைகளை போட்டு நன்கு தாளிக்கவும்.

அதோடு வெங்காயம், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதன் பிறகு ஊற வைத்த பாசுமதி அரிசி போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். சாதம் வெந்த பிறகு நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.

தம் போடுவதற்கு:

அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, சிறு தீயில் மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து தம் போடவும். அதன் பிறகு சாதத்தைக் கிளறி, ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறினால் ஹெல்த்தி காஷ்மீரி புலாவ் பறிமாறத் தயார்.

வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பொட்டு கடலை – 3 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 7
கிராம்பு – 3
பட்டை சிறிய துண்டு – 1
சோம்பு – 1 ஸ்பூன்
கல்பாசி – அரை ஸ்பூன்,
முந்திரி – 4
எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை விளக்கம்:

முதலில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும். காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =

Most Popular