தவலை அடை மற்றும் கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி

197

பாரம்பரியமான தவலை அடை மற்றும் கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பாரம்பரியம் மிக்க சுவையான தவலை அடை தயார்.

கத்தரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1/2 கிலோ,
வெங்காயம்-1 பெரியது,
தக்காளி -1 பெரியது,
கறி வேப்பிலை – சிறிதளவு ,
உப்பு -தேவையான அளவு,
புளி -1 ஒரு எலுமிச்சைப்பழம் அளவு,

வறுத்து பொடிக்க:

சிவப்பு மிளகாய் – நான்கு,
மல்லி -1 மேஜைக்கரண்டி,

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, இடித்து, போடி செய்து, தயாராக வைத்துக்கொள்ளவும்.

செய்முறை விளக்கம்:

கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிதம் செய்யவும். நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், 2 கோப்பை நீர் சேர்த்து நன்கு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

பிறகு, மையாக கடைந்து கொள்ளவும், வறுத்து பொடித்த மிளகாய், மல்லி போடி சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். மல்லி இல்லை தூவி தலலை அடையுடன் சுடச்சுட பரிமாறவும்.

குறிப்பு:

கத்தரிக்காய் மட்டும் வேக வைத்து கடைந்து கொண்டு, தக்காளி வெங்காயம் வதக்கியும், பொடி கலந்து செய்யலாம்.