முடகத்தான் தோசையுடன் மிக்ஸ்டு பருப்பு கொத்சு செய்வது எப்படி?

147

முடகத்தான் தோசையுடன் மிக்ஸ்டு பருப்பு கொத்சு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. நறுக்கிய முடக்கத்தான் கீரை – இரண்டு கப்
 2. புழுங்கல் அரிசி – ஒரு கப்
 3. உளுந்து – ஒரு டீஸ்பூன்
 4. வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
 5. துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
 6. எண்ணெய் – தேவையான அளவு
 7. உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

அரிசி, உளுந்து, வெந்தயம், மற்றும் துவரம் பருப்பு ஆகிவற்றை ஒன்று சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும் அரைத்துக் கொண்டிருக்கும் போதே முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்பு தோசை தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். சத்தான முடகத்தான் தோசை தயார். இதை மிக்ஸ்டு பருப்பு கொத்சு செய்ய அத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
முடக்கு அறுத்தான் என்பது தான் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட… கை, கால், மூட்டு வலி குணமாகும். மேலும், மூட்டுகளில் ஏற்படக் கூடிய வலி, வீக்கம் போன்ற வற்றைச் சரி செய்யும். முடக்கத்தானின் இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.

மிக்ஸ்டு பருப்பு கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

 1. பாசிப் பருப்பு – 1 கப்
 2. பச்சைப் பயறு – 2 கரண்டி
 3. நிலக்கடலை – 2 கரண்டி
 4. கொள்ளு – 2 கரண்டி
 5. தக்காளி – 2
 6. பச்சை மிளகாய் – 4
 7. பச்சை கத்தரிக்காய் – 2
 8. காய்ந்த மிளகாய் – 2
 9. கடுகு – 1/2 தேக்கரண்டி
 10. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 11. கறிவேப்பிலை – சிறிதளவு
 12. சீரகம் – 1/4 தேக்கரண்டி
 13. சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
 14. உப்பு – தேவையான அளவு

  செய்முறை விளக்கம்:

தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும். வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொத்சு வில் சேர்த்தால் சுவையான மிக்ஸ்டு பருப்பு கொத்சு தயார்.