ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் செய்வது எப்படி?

158

ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்ய தேவையான பொருட்கள்:

• அரிசி – 50 கிராம்,
• வெல்லம் – 100 கிராம்,
• தேங்காய் பால் – 200 கிராம்,
• தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு,
• முந்திரி – தேவையான அளவு,
• ஏலக்காய் தூள் – சிறிதளவு,
• நெய் – தேவையான அளவு,
• உலர்ந்த திராட்சை – சிறிதளவு,
• சுக்குப் பொடி – ¼ டீஸ்பூன்,
• வாழை இலை – இரண்டு.

செய்முறை விளக்கம்:
• முதலில் அரிசியை சுத்தம் செய்து கழுவி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
• பின்னர் ஊற வைத்த அரிசியை மென்மையாக தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
• வாழை இலையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து அதில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
• அரைத்த மாவை நெய் தடவி வைத்துள்ள வாழை இலையில் மெலிதாக பரப்பி மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• மாவு வெந்த பிறகு இலையில் இருந்து எடுத்து ஆறவிடவும்.
• அதன் பின்னர் சூடு ஆறிய பின் மாவினை சிறு சிறு துண்துகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
• பின்னர் வெல்லத்தைக் தண்ணீரில் சேர்த்து கரைத்து மண் இருந்தால் வெல்லத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
• பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்க்கவும்.
• நெய் சூடானதும் அதில் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும்.
• அதே வாணலியில் மேலும் சிறிது நெய்யை சேர்த்து சூடாக்கி வேக வைத்து வைத்துள்ள அடையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
• கரைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை அடையில் சேர்த்து கிளறிவிடவும்.
• மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
• அடை வெல்லத்துடன் சேர்ந்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
• கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறவும்.
• பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
• சிறிதளவு ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் சுவைக்கத் தயார்.