மிகவும் சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் பதிர் பேனி இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
- மைதா – இரண்டு கப்
- எண்ணெய் – கால் கிலோ
- நெய் – 100 கிராம்
- பொடித்த சக்கரை – தேவையான அளவு
- பாதாம் பால் – தேவையான அளவு
- சோடா உப்பு – ஒரு சிட்டிகை
- உப்பு – சுவைக்காக ஒரு சிட்டிகை
- ரெடிமேட் பாதாம் மிக்ஸ் – நான்கு ஸ்பூன்
- காய்ச்சிய பால் – தேவையான அளவு
பதிர் செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – அரை கப்
- நெய் – கால் கப்
செய்முறை விளக்கம்:
முதலில் பாலை நன்றாக காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், காய்ச்சிய பாலில் ரெடிமேட் பாதாம் மிக்ஸ் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து அதோடு 100 கிராம் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை கால் போட்டு அதனுடன் கால் கப் நெய் விட்டு பேஸ்ட் போல் செய்ய வேண்டும்.
பிசைந்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் தோய்த்து ஆறு அப்பளமாக இட்டு, ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு மற்றும் நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி, பாய் போல் சுருட்டி, பின்பு அதை நான்கு பாகமாக கீரல் போட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் இந்த மாவை லேசாக தேய்த்து வைக்க வேண்டும். இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் உருட்டி வைத்தவற்றை போட்டு பிரவுன் நிறத்தில் வரும் வரையில் பொரித் தெடுக்க வேண்டும். நாம் பரிமாறும் போது அதன் மேலே பொடித்த சக்கரையைத் தூவி, கரைத்து பாதாம் மிக்ஸ் பாலை ஊற்றி பரிமாற வேண்டும். இப்போது சூப்பரான கல்யாண வீட்டு ஸ்பெஷல் பதிர் பேனி ரெடி. நீங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம்.
தீபாவளி போன்று முக்கியமான பண்டிகை நாட்களில் கூட பதிர் பேனி ரெசிபி செய்யலாம்.
