பக்குவமாக பாலக் தால் செய்யலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை – 1 கட்டு,
துவரம் பருப்பு – கால் கப்,
பெரிய வெங்காயம் – 1 ,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2 ,
இஞ்சி – 1 துண்டு ,
பூண்டு – 4 பற்கள் ,
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன் ,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – பருப்பு வேக வைக்க தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். * பிறகு துவரம் பருப்புடன் தண்ணீர், சிறிது மஞ்சள், பூண்டு, எண்ணெய் சேர்த்து மசிய வேக வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். * 2 நிமிஷம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிய வெந்ததும், சுத்தம் செய்து வைத்துள்ள பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கலந்து வேகவிட வேண்டும் . * தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை வேகும்போது விடும் நீரே போதுமானதாக இருக்கும். கீரை நன்றாக வெந்தததும் வேகவைத்து வைத்துள்ள துவரம் பருப்பில் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கரண்டி அல்லது மத்து கொண்டு நன்றாக மசித்து விட்டு கீரை வெந்து குழம்பு கொதிக்கும் போது தீயை அணைத்து விட்டு கொத்தமல்லி இலையை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும். சாதத்திற்கு மட்டுமின்றி இந்த பாலக் தால் சப்பாத்தி வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும் * மிகவும் சத்தான பாலக் தால் ரெடி.
