Sunday, October 22, 2023
HomeHealthy Recipesபப்பாளி பழம் அல்வா செய்யலாம் வாங்க

பப்பாளி பழம் அல்வா செய்யலாம் வாங்க

சுவையான பப்பாளி பழம் அல்வா செய்யலாம் வாங்க

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்:

பப்பாளி பழத்தில் புரதத்தை ஜீரணிக்க உதவும் சைமோபாபைன் மற்றும் பபைன் போன்ற என்சைம்கள் இருப்பதால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெறும். மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

மேலும் பப்பாளி, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, தான் இந்த பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆகவே இதில் சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:
• பப்பாளி பழ துண்டுகள் – 2 கப்
• சர்க்கரை – 1 கப்
• சோள மாவு – 2 ஸ்பூன்
• நெய் – தேவையான அளவு
• ஏலக்காய் தூள் – சிறிதளவு
• முந்திரி – தேவையான அளவு
• பாதாம் பருப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
• முதலில் பப்பாளி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
• நறுக்கிய பப்பாளி பழத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து நெய் சூடானதும் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
• அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பப்பாளி பழத்தை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி விடவும்.
• பப்பாளி பழத்தின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கலந்து விடவும்.
• பின்னர் அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
• சர்க்கரை நன்கு கரைந்ததும் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
• பின்னர் கரைத்த சோள மாவினை பப்பாளி பழத்துடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
• நன்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறி விடவும்.
• கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் பருப்பை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளி பழ அல்வா ரெடி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =

Most Popular