Thursday, November 2, 2023
HomeHealthy Recipesஅசத்தலான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பாவ் பாஜி செய்யலாம் வாங்க

அசத்தலான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பாவ் பாஜி செய்யலாம் வாங்க

அசத்தலான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பாவ் பாஜி செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

• 3 தக்காளி (நறுக்கியது)

• 2 கேரட் (பொடியாக நறுக்கியது)

• 10 பீன்ஸ் பொடியாக (நறுக்கியது)

• 2 உருளைக்கிழங்கு (நறுக்கியது)

• 1/2 கப் பச்சை பட்டாணி

• உப்பு தேவையான அளவு

• 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)

• 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

• 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

• 1 தேக்கரண்டி சீரகத்தூள்

• பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

• 1 சிட்டிகை கேசரி கலர்

• 6 பன்

• 10 தேக்கரண்டி வெண்ணை

• 1/2 எலுமிச்சை பழம்

செய்முறை விளக்கம்:

ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் 3 நறுக்கிய தக்காளி, 2 பொடியாக நறுக்கிய கேரட், 10 பீன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். மேலும் அரை கப் பச்சை பட்டாணி 2 பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு மற்றும் இந்த காய்கறிகள் வேக தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.

பிரஷர் குக்கரை மூடி 3- 4 விசில் வைக்கவும் அல்லது மூடி வைத்து 20 – 25 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். காய்கறிகள் நன்கு வெந்த பின்னர் ஒரு ம வைத்து மசித்து விடவும். இப்பொழுது ஒரு வானலியில் 4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்.

அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை கலக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகளை இதனுடன் சேர்த்து கலக்கவும். இப்பொழுது 1 சிட்டிகை கேசரி கலர், 1/4 கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கலக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கடைசியாக 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும், இப்போது பாவ்பாஜி மசாலா தயாராக உள்ளது. ஒரு தோசைக்கல்லில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, சூடாக்கவும் பின்னர் பன் நடுவில் வெட்டி 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

இப்போது பாவ் பாஜி மசாலா, பன் மற்றும் சிறிதளவு வெங்காயம் மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து 1 தேக்கரண்டி வெண்ணெய் ஆகியவற்றுடன் பரிமாறவும். அசத்தலான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பாவ் பாஜி தயார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + six =

Most Popular