Saturday, October 28, 2023
HomeHealthy Recipesபாலக்  ஸ்டஃப்டு கோதுமை  பரோட்டா வித் ஸ்பைஸி குருமா செய்வது எப்படி?

பாலக்  ஸ்டஃப்டு கோதுமை  பரோட்டா வித் ஸ்பைஸி குருமா செய்வது எப்படி?

பாலக்  ஸ்டஃப்டு கோதுமை  பரோட்டா வித் ஸ்பைஸி குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்

பாலக் கீரை – 1 கட்டு

அரைத்த பச்சைமிளகாய் – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

 ஸ்டஃப்பிங் செய்வதற்கு:

 துருவிய பன்னீர் – 1/4 கப்

நறுக்கிய பச்சைமிளகாய் – 3

கொத்தமல்லித் தழை – 4 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு  

செய்முறை:

முதலில் பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து கொள்ளவும்.  கொத்தமல்லித் தழை, பன்னீர், பச்சை மிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக் கல்லில்  போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். சுவை மிகுந்த பாலக் ஸ்டஃப்டு கோதுமை  பரோட்டா  தயார்.

ஸ்பைஸி குருமா செய்ய :

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – பெரியது 1
தக்காளி – பெரியது 1
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பீன்ஸ் – 1 கப்
கேரட் – 1 கப்
முளைகட்டிய பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
காலிபிளவர் – 1 கப் (சூடு தண்ணீரில் நன்கு கழுவியது)
பால் – 1/2 டம்ளர்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் – 1 கப்
கசகசா – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4,5 நம்பர்

செய்முறை:

ஒரு குக்கர் எடுத்து கொண்டு  அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை அவற்றோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்போது குருமாவிற்கான மசாலாவான மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். பிறகு குருமாவிற்கென நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி தண்ணீர் சேர்க்கவும். பின்னர் குக்கர் என்றால் அவை ஓரளவு வேக தேவையான அளவு விசில் வைக்கவும்.

இதற்கிடையில், அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். இப்போது முன்னர் வேக வைத்த காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், அவற்றுடன் இந்த மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். அவை சில நிமிடங்களுக்கு கொதித்த பிறகு அவற்றோடு பால் சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடம் கழித்து 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவற்றை நன்கு வேக விடவும். அவை நன்கு வெந்து தயாரானதும் அவற்றை கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை தூவி பரோட்டா வுடன் பரிமாறவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =

Most Popular