Saturday, October 28, 2023
HomeHealthy Recipesகோடைக்காலத்தில் இந்த முலாம்பழம் தரும் நன்மைகள் ஏராளம்!

கோடைக்காலத்தில் இந்த முலாம்பழம் தரும் நன்மைகள் ஏராளம்!

கோடைக்காலத்தில் இந்த முலாம்பழம் தரும் நன்மைகள் ஏராளம்!

கோடைக்காலம் தொடங்கியதும் நம் நினைவுக்கு வருகிற பழங்களில் ஒன்று தான் முலாம்பழம். இந்த கோடைகாலங்களில் உடலில் நீர் சத்துக்கள் குறைந்து உடல் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் உடல் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. முலாம் பழங்களை துண்டுகளாக்கி ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

மேலும், முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும், நார்ச்சத்தும் வளமான அளவில் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. எனவே முலாம் பழத்தை சாப்பிடுவதால் அல்லது ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை ஏராளம்…

1.முலாம்பழத்தின் சதை மற்றும் விதையுடன் சிறிதளவு சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தையும் கொடுக்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கிறது.

2.கர்ப்பிணி பெண்கள் முலாம்பழத்தை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் குதுகெலும்பு மற்றும் மூளை வளர்ச்சி போன்றவை நன்றாக இருக்கும். இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது.

3.காய்ச்சிய பாலுடன், விதை நீக்கிய முலாம்பழம், பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின் போது எடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

4.முலாம்பழத்தினை உண்டுவர மூல நோய் குணமாகும். மலசிக்கல் நீங்கும், நீர்க்கடுப்பு நீங்கும், அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

5.முலாம்பழம் பித்தத்தை மொத்தமாக அகற்றும். கல்லீரல் கோளாறுகளை போக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும் சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து. இப்பழத்தின் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும்.

6.முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் கண்பார்வைக்கு மிகவும் அவசியமானவை. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதே போல் கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

7.முலாம்பழத்துடன் 1/4 ஸ்பூன் சீராக பொடி, சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் 2 சிட்டிகை சுக்குப் பொடி இவற்றை கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்றுவலி மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சரியாகும்.

8.மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும், நார்ச்சத்து குறைந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. முலாம் பழங்களில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், முலாம் பழ ஜூஸ் குடித்து வந்தால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

9.முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் இரத்த செல்கள் உறைவதை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

10.முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக இருப்பதால் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே முலாம் பழம் சாறு அருந்தி வருவது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eight =

Most Popular