பொரிச்ச குழம்பு வித் பாகற்காய் மசாலா கறி செய்யலாம் வாங்க!
தேவையானப்பொருட்கள்:
காய்கறி நறுக்கியது – 2 கப் (வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்)
பயத்தம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.
காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதற்கு ஏற்ப பாகற்காய் மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்…
பாகற்காய் மசாலா கறி செய்ய தேவையான பொருட்கள்:
* பாகற்காய் – 3
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் – சுவைக்கேற்ப
* வெல்லம் – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் பாகற்காயின் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாகற்காயை போட்டு, 2-3 டேபிள் பூன் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தக்காளியை சேர்த்து உப்பு தூவி நன்கு தக்காளி வதங்கும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சர்க்கரை தூவி கிளறி விட வேண்டும்.
பின் மூடி வைத்து குறைவான தீயில் பாகற்காயில் மசாலா அனைத்தும் சேரும் வரை ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகற்காய் மசாலா கறி தயார்.
