சுவையான சுரைக்காய் தோசை வித் கோங்ரா சட்னி செய்யலாம் வாங்க!

278

சுவையான சுரைக்காய் தோசை வித் கோங்ரா சட்னி செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

1. புழுங்கல் அரிசி – 1 கப்,
2. பொடியாக நறுக்கிய சுரைக்காய் – 2 கப்,
3. 3-4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்,
4. வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
5. அவல் – ¼ கப் ,
6. சமையல் எண்ணெய் – தேவையான அளவு,
7. உப்பு – தேவையான அளவு,
8. தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

1. முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை பாத்திரத்தில் போட்டு, அதை நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த பிறகு, தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் மாற்றவும். தோசை மென்மையாக இருக்க, ஊறவைத்த அரிசியசடன் அவலை சேர்க்கவும்.
3. தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மாவாக வரும் வரை அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
4. அடுத்து அதே ஜாரில் சுரைக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும். அரைத்த சுரைக்காயை மாவுடன் சேர்க்கவும்.
5. மாவை நன்கு கலக்கவும்.மூடியை மூடி, அந்த மாவு சிறிது புளிப்பதற்கு ஒரு ஏழு மணி நேரம் விடவும்.
6. இப்போது மாவு சற்று பொங்கி இருக்கும். அதன் பின் மூடியைத் திறந்து தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் நன்கு தோசை மாவு பததிற்கு கலக்கவும். தேவை பட்டால் சிறிது தண்ணீர் விடலாம்.
7. இப்போது தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி தோசை யை ஊற்றவும்.
8. 5-10 விநாடிகளுக்கு மூடியை மூடு. மிதமான தீயில் சமைக்க வேண்டும் .
9. மூடியைத் திறந்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மடித்து எடுத்தால் சுவையான சுரைக்காய் தோசை தயார்.

கோங்ரா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

புளிச்ச கீரை – 1 கட்டு,
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு,
பூண்டு – 15 பல்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ,
காய்ந்த மிளகாய் – 2,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன் ,
தனியா (விதை) – 1டீஸ்பூன்,
கடுகு – 1டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன் ,
பெருங்காயம் – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1/4டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 கப்.

செய்முறை விளக்கம்:

1.முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்கவும். வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுதெடுக்கவும்.

2.வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். புளி தண்ணீர் மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். அரை கப் எண்ணெய்யில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கவும்.

3.மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும். எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். நன்றாக கலறினால் ருசியான கோங்குரா சட்னி தயார். இதை சுரைக்காய் தோசை யுடன் பரிமாறவும்.