Wednesday, October 18, 2023
HomeHealthy Recipesகாய்ச்சலுக்கு மருந்தாகும் கோதுமை நொய் கஞ்சி!

காய்ச்சலுக்கு மருந்தாகும் கோதுமை நொய் கஞ்சி!

காய்ச்சலுக்கு மருந்தாகும் கோதுமை நொய் கஞ்சி!

கோதுமைக் கஞ்சி, கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி என்று செய்து குடித்தால் காய்ச்சலால் உடல் இழந்த பலத்தை மீட்டெடுக்கலாம்.

செரிமானக் கோளாறு, அஜீரணம் உள்ளவர்கள் கூட இந்த கோதுமை ரவைக் கஞ்சி செய்து குடிக்கலாம். கபம் நோய் உள்ளவங்க ‘கோதுமைப் பால்’ செஞ்சு குடிச்சா ரொம்ப நல்லது.

கெமிக்கல், உலோகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொழிற்சாலை நஞ்சு உடலில் கலந்துவிடாமல் இருக்க தினந்தோறும் கோதுமை மாவை நீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கோடை காலத்தில் கோதுமை மாவை வினிகரில் கலந்து பூசி வந்தால் வியர்க்குரு குணமாகும்.

சுளுக்கு ஏற்பட்டால், வலி அதிகமாக இருக்கும். அப்படி சுளுக்கு ஏற்பட்டவர்கள் கோதுமை மாவை களியா செஞ்சு சுளுக்கு உள்ள இடத்தில் கட்டினால் வலி குறையும்.

அக்கி, நெருப்பு பட்ட இடம், மேல்தோல் உரிஞ்ச இடத்தில எல்லாம் கோதுமை மாவ பூசி வந்தா, அந்த இடத்துல உள்ள எரிச்சல் தணியும்.

நெஞ்சு சளிக்கும் கப பிரச்சனைக்கும் கோதுமை தவிட ஒற்றடமா உபயோகிச்சா நோய் வீரியம் குறையும்.

கோதுமை மாவுடன் பச்சைப் பயறு மாவு, தயிர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்.

கோதுமையை வறுத்து, அதோடு தேன் கலந்து 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட மூட்டுவலி குறையும்

கோதுமைப் பால் செய்யும் முறை:

30 கிராம் கோதுமை நொய்யை முந்தைய நாளில் நீரில் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் நன்றாய் அடித்து பசையாக்கி, மெல்லிய துணியால் வடிகட்டி பிழிந்தெடுத்தால் கோதுமைப்பால் கிடைக்கும்.

சர்க்கரை நோய்க்கும் கோதுமை மருந்தாக பயன்படுகிறது. தினந்தோறும் கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் உணவுகளை பயன்படுத்தலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் உணவாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக சப்பாத்தி, கோதுமை தோசை, கோதுமை கஞ்சி கஞ்சி என்று செய்து சாப்பிடலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 4 =

Most Popular