சித்தருக்கும், அகோரிகளுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?
மக்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காதவர்கள்; அசுத்தத்தையும் புனிதமாகப் பாவிப்பவர்கள்; அசாத்திய மனஉறுதி உள்ளவர்கள் ஆகியவற்றில் மட்டும் சித்தர்களுக்கும், அகோரிகளுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது.
வேற்றுமைகள்:
அகோரிகள், பொதுவான, வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளை மட்டுமே தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். அந்த கோட்பாடுகள், அகோரிகளுக்கான புனித நூல்களுள் இடம்பெற்றுள்ளன. சித்தர்கள், ஒருசில கோட்பாடுகள் தவிர, மற்றபடி பெரும்பாலான கோட்பாடுகளில், வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.
அகோரிகளுக்குச் சடங்குகள் இன்றியமையாதவை; சித்தர்கள், சடங்குகளைப் பொருட்டாகக் கொள்வதில்லை. அகோரிகள், குறிப்பிட்ட வடிவத்திலேயே காணப்படுகின்றனர். சித்தர்களோ, பல்வேறு விதமான வடிவங்களில் காணப்படுகின்றனர்.
அகோரிகள், பெரும்பாலும் முரட்டு சுபாவம் கொண்டவர்கள். சித்தர்கள், பெரும்பாலும் இளகிய சுபாவம் கொண்டவர்கள். சித்தர்கள் பலதுறை கலை வல்லுநர்களாக உள்ளனர்; அகோரிகளுள் பலதுறை கலைவல்லுநர்கள் இருப்பதில்லை. அகோரிகள் நிர்வாணிகளாகவோ, இடுப்பில் மட்டும் ஆடையுடுத்தியவர்களாகவோ காணப்படுவதுண்டு; சித்தர்கள், நிர்வாணியாகவோ, இடையாடை உடுத்தியவர்களாகவோ, முழு ஆடை தரித்தவர்களாகவோ கூட இருப்பதுண்டு.
சித்தர்கள் நூல்கள் அதிகமுள்ளன; அகோரிகள் நூல்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. அகோரிகளை மிகவும் கொடூரமானவர்களாகவும் இரக்கம் இல்லாதவர்களாகவும். அரையும் குறையுமாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. காசியில் வாழும் அத்தனை பேர்களும் அகோரிகள் அல்ல. அங்கே அகோரிகள், யோகிகள், ஞானிகள், ரிஷிகள் சிவனடியார்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் மற்றும் பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு மறைந்து வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் சேர்ந்து இருக்கும் இடம்.
ஏனென்றால் சராசரியான மனிதர்களுக்கு அகோரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியாது. அகோரிகள் எந்த தெய்வங்களையும் வணங்குவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் சிவனே. பஞ்ச பூதங்களும் நவ கிரகங்களும் அவர்தம் கைப்பாவைகள். அவர்கள் யாரும் அனேகமாக வெளி உலகிற்கு வருவதில்லை. அவர்களுடைய பார்வை என்றாவது ஒருநாள் யாருக்கேனும் கிடைப்பதால் அவர்கள் பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள். குருமார்களின் கண் பார்வை பட்ட மாந்திரீகர் ஆக இருந்தாலும் சரி மற்றைய தேவைகளுக்காக காசியை வந்து அடைந்து . பக்திக்காகவும் , முத்திக்காகவும், யோக, ஞான, ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக தவம் மேற்கொள்பவர்கள்.
அவர்களுடைய எண்ணம் விரைவில் கைகூடுகிறது. உலகிலிருந்து காசிக்குச் செல்லும் அனைவருக்கும் அவர்களுடைய தரிசனமும் அவர்களுடைய போதனைகளை கிடைக்கும் என்பதில் எந்த உத்திரவாதம் கிடையாது.
ஏனெனில் அவர்கள் அகோரிகளை சந்திப்பார்களா இலை யோகிகள் ஞானிகள் ரிஷிகள் மாந்திரீகர்களை சந்திப்பார்களா பிச்சைக்காரர்களை சந்திப்பார்களா என்பது அவரவர் தம் புனர் ஜென்ம பாவ புண்ணியங்களை பொறுத்தே அமையும்.
அத்தனை பேர் கூடும் கும்பமேளாவில் மொத்தம் 55 லிருந்து 60 அகோரிகள் மட்டுமே இருப்பர். (மனிதர்களின் கண்களுக்கு) இவ்வுலகின் மொத்த அகோரிகளின் எண்ணிக்கை அத்தனையே. மற்றைய தினங்களில் அவர்கள் அத்தனை பேரும் அங்கேயே இருப்பதில்லை. யாருக்கு தெரியும் உங்கள் பக்கத்து வீட்டில் கூட சித்தரோ யோகியும் ஞானியும் அகோரிகள் இருக்கலாம். அவர்கள் யாரும் பெரிதாக பட்டை அடித்து விட்டு பளபளக்கும் காவி உடையுடன் தலையில் குடுமியுடன் தாடியுடன் இருப்பதில்லை. சாதாரண மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டிருப்பார். பிச்சைக்காரர்களின் கூட எத்தனையோ அகோரிகள் யோகிகள் ஞானிகள் ரிஷிகள் இருப்பார்கள். அவர்கள் யாரும் பணத்திற்காக வாழ்பவர்கள் அல்ல.
அவர்களை அவ்வாறு சித்த சித்தரித்ததற்கு காரணம். அவர்கள் யாரும் மக்களோடு மக்களாய் பழகுவதில்லை. சிகை அலங்காரம் செய்து திருத்திக் கொள்ளவும் முகச்சவரம் செய்து கொள்ளவும் காடுகளில் அவர்களுக்கு யாரும் கிடைப்பதில்லை. ரிஷிகள் அனைவரும் காவி உடையை பயன்படுத்தியதற்கு ஒரே ஒரு காரணம்தான் காடுகளில் வாழும் விஷப்பூச்சிகள் எதுவும் அவர்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக மட்டுமே. இந்த கலியுகத்தில் வாழும் மாந்திரீகர்கள் அனைவரும் காவி உடையை தரித்துக்கொண்டு குடுமியும் தாடியும் வைத்துக்கொண்டும் நெற்றியில் பெரிய விபூதி பட்டையுடன் வலம் வருகின்றனர். நீ முற்றும் உணர்ந்த குரு என்றால் உனக்கே எதற்கு விபூதி பட்டை.
மக்களோடு மக்களாய் வாழும் உன்னிடம் சவரம் செய்துகொள்ள கூட பணம் இல்லையா. விலை உயர்ந்தப் வாகனங்களில் போகும் அளவிற்கு பணம் இருக்கிறது அவர்கள் மயிர் திருத்திக்கொள்ள பணம் இல்லையா.
பழங்காலத்தில் இருந்தே குருமார்கள் அனைவரும் உச்சந்தலையில் அவர்கள் சடையை சுட்டி வைத்திருந்ததன் காரணம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு. அந்த சடையை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
தலையின் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ அந்த சடையை சுற்றி வைத்தால். ஓய்வாக படுக்கும்போது நித்திரைக்கு மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்தும் அதனாலேயே அவர்கள் உச்சந்தலையில் வைத்தார்கள்.
ஆனால் அதுவே இப்போது ஃபேஷனாகிவிட்டது. உண்மையான சாமியார் என அடையாளப்படுத்துவது அவர்களின் குடுமி, தாடி , காவி உடை, வைத்திருக்கும் மடம்.