பிதாமகர் ‪பீஷ்மர்‬ கூட இருக்கிறப்ப கௌரவர்கள் ஏன் தோற்றார்கள்?

359

குருஷேத்திரப் போரில், பீஷ்மர் சரியாக தன்னுடைய முழு ஆற்றலுடன் போரிடவில்லை என்று அவரை துரியோதனன் எப்பொழுதும் குறை கூறிக்கொண்டு இருந்தான்.
பீஷ்மரும் வெறுத்து போய் சரி, நாளை நான் பாண்டவர்களை வேரோடு சாய்க்கிறேன் என்று சொல்லி, ஆளுக்கொரு அம்பாக ஐந்து அம்புகளை தயார் செய்து துரியோதனிடம் காட்டி, இவை தான் பாண்டவர்களின் சத்ருக்கள் என்றார் . துரியோதனன் அவரை நம்பாமல் , அந்த பாணங்களை தன்னிடம் கொடுக்கும் படி கேட்டு வாங்கி, அதைத் தானே பிரயோகிக்கப் போவதாக முடிவெடுக்கிறான்.
இது கிருஷ்ணனுக்குத் தெரிய வந்தது.
உலகின் மிகப்பெரிய சாணக்கியதாரி அவர்.
அர்ஜுனனை கூப்பிட்டு ,
நீ ஒரு முறை துரியோதனன் உயிரை கந்தவர்களிடமிருந்து காப்பற்றிய பொழுது அவன் உனக்கு ஒரு வரம் கொடுத்தான் அல்லவா? அந்த வரத்தை வாங்கும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது துரியோதனிடம் சென்று அந்த ஐந்து பாணங்களை அவன் கொடுத்த வரத்திற்கு ஈடாக பெற்று வா என்று சொல்லி அனுப்ப ,
அர்ஜுனனும் துரியோதனிடம் கேட்க , துரியோடனும் மறுக்க முடியாமல் , அந்த அம்புகளை அர்ஜுனனிடம் கொடுத்து விட்டான் .

பின்பு பிஷ்மரிடம் சென்று, நடந்ததைக் கூறி இன்னும் அதே போல 5 அம்புகள் வேண்டும் என்று கேட்ட போது பீஷ்மர் சொல்கிறார்.துரியோதனா, “என் ஆயுளின் எல்லா தவபலங்களையும் திரட்டி முழுத் திறனுடன் உருவாக்கப்பட்ட அம்பு அவை. அதே போல இன்னொரு முறை உருவாக்க, நான் இன்னொரு முறை என் வாழ்க்கையை வாழ்ந்தால் தான் முடியும். உடனடியாக முடியாது” என்று மறுத்துவிட்டார் .

ஆக, தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையெல்லாம் ‪துரியோதனன்‬ தன் நிதானம் தவறியதால் வெற்றி வாய்ப்புகளை ஒவ்வொன்றாக நழுவ விட்டான்