பெரியப்பா, நம் படைக்கு தலைமை தாங்கி, இந்த வியூகத்திற்குள் நுழைய தான் சந்தோஷமடைகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. எனக்கு அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்ற ரகசியம் தெரியாது. என்னால் வெளியே வர முடியாது. என் உயிர் போவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த படையை என்னால் தனியாக கையாள முடியாது.” என கூறினான்.
தன் தம்பியின் மகனின் தைரியமான பேச்சை கேட்டு சந்தோஷமடைந்த யுதிஷ்டிரர், “மகனே, நீ தனியாக இருக்க மாட்டாய். நாங்கள் அனைவருமே உன் பின்னால் தான் இருப்போம். நீ இந்த வியூகத்திற்குள் வெற்றிகரமாய் நுழைந்து விட்ட உடனேயே உன்னை பின் தொடர்ந்து நாங்களும் வந்து விடுவோம். எங்களுக்கும் வெளியே வர தெரியாது என்றாலும் கூட நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சண்டையிடுவோம். எப்படியாவது அதனை விட்டு வெளியேற முயற்சி செய்வோம்” என கூறினார்.
இதனை கண்டு ஊக்கமடைந்த அந்த இள போர் வீரன், படைக்கு தலைமையேற்று, அந்த வியூகத்திற்கு தலைமை வகித்த துரோணாச்சாரியாவை நோக்கி முன்னேறினார்கள். மிக சுலபமாக அவன் இந்த வியூகத்திற்குள் நுழைந்து விட்டான். ஆனால் இந்த ஒரு வாய்ப்புக்காக காத்திருந்த கௌரவர்கள், வியூகம் திறக்கப்பட்ட உடனேயே மூடி விட்டார்கள். இதனால் அதற்குள் அபிமன்யூ மட்டும் மாட்டிக்கொண்டான். அவனைச் சுற்றி கர்ணன், துரியோதனன், துச்சாதனன், துரோணாச்சாரியார், அஸ்வதம்மா மற்றும் இன்னும் பல வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த இளம் போர் வீரன் அனைத்து எதிரிகளையும் தைரியமாக, ஒற்றை ஆளாக சமாளித்தான். இதனால் மிகுந்த திறமைசாலியான போர்வீரர்கள் கூட திணறினார்கள். தன் மாமாவான கிருஷ்ணரிடம் தான் கற்றுக்கொண்ட அனைத்து கலைகளையும் பயன்படுத்தி எதிரிகளை திறமையாக சமாளித்தான்.
தன் எதிரியின் மகனின் இந்த ஆற்றலை கண்டு கோபமுற்றான் துரியோதனன்.
போர் கலையின் மீது அவனுக்கு இருந்த திறமையை பார்த்து துரோணாச்சாரியார் புகழ்ந்ததனால் அவன் மேலும் கோபமடைந்தான். கௌரவர்களின் படையின் மீது தனக்கு இருக்கும் கடமையை துரோணாச்சாரியாவுக்கு ஞாபகப்படுத்தினான் துரியோதனன். கடமையை செய்து எதிரியை வீழ்த்த கூறினான். விருப்பமில்லாமல், தன் அனுபவம் மற்றும் ஆற்றலை கொண்டு அபிமன்யூவின் தாங்கும் தன்மையை உடைத்தார் துரோணாச்சாரியார்.
அனைத்து திசைகளில் இருந்தும் வீரர்கள் சூழ்ந்தாலும் அபிமன்யூ விட்டு விடவில்லை.
இன்னும் உற்சாகத்துடன் சண்டையிட்டான். தன் தேரை இழந்த போது, தரையில் இறங்கி, எதிரிகளை தைரியமாக எதிர்த்து நின்றான். அவன் வில் உடைந்த போது, தன் வாளையும் கேடயத்தையும் எடுத்தான். தன் வாளும் உடைந்த போது, தன் கதை மற்றும் ஈட்டியை எடுத்தான். தன் அனைத்து ஆயுதங்களும் தொலைந்த போதும் கூட உடைந்த தன் தேரில் இருந்து ஒரு சக்கரத்தை பயன்படுத்தி எதிரிகளை சமாளித்தான்.
கடைசியாக தேரின் சக்கரமும் உடைந்து போனது. ஆனால் அபிமன்யூ இன்னும் சண்டையை முடிக்கவில்லை. துச்சாதனின் மகனோடு நேருக்கு நேர் சண்டையிட்டான். அவனிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது, விதியை மீறி அவன் எதிரிகள் ஆயுதங்களுடன் வந்தனர்.
அதனால் தான் கடைசியில் அவன் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தது.