கோகுலாஷ்டமி ஸ்பெஷல் !

1343

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணக்கதை உண்டு.

அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா.

அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாகும். கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார்.

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் – என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும்.

கோகுலாஷ்டமி நாளன்று வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.

கோகுலாஷ்டமி தினத்தன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

அறிவாற்றல்,நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதையை பின்பற்றுவதே இப்பண்டிகையின் தத்துவம்.

கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வாழ்வில் வளம் பெறுவோம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராகுங்கள் !!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !