பிரதோஷ கால ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி பூஜா மகிமை .

352

பிரதோஷ நேரமானது சிவபூஜைக்கு மட்டும் அல்லாது பெருமாள் பூஜைக்கும் சிறப்பானதாகும்

பிரதோஷ நேரத்தில் தான் பரபிரம்மன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கு பூஜை செய்வதனால் அபரிமிதமான பயன்களை பெற்றிடலாம்.

பிரதோஷ பூஜை என்றால் சிவபெருமானுக்கு மட்டுமே என்று நாம் எண்ணி வந்துள்ளோம் அல்லவா!
பலருக்கும் பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவதாரம் ஏற்பட்டது என்பது தெரியாது. இதனால் தான் பெரும்பாலும் தூண்களில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு எதிரில் உள்ள தூண்களில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருப்பார்.

ஸ்ரீ நரசிம்மருடைய உக்ரத்தை தணிப்பதற்காகத் தேவதாசி தேவ மூர்த்திகளும், தேவதைகளும், ஸ்ரீ மகாலட்சுமி தேவியும், ஸ்ரீ பார்வதி பல விதமான பூஜைகளை மேற்கொண்டனர்

எந்த திவ்விய தேசத்தில் இல்லாத சிறப்பு என்னவென்றால் கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி வலது பக்கத்தில் ஸ்ரீ லட்சுமி உடன் அவதரித்து சேவை சாதித்து கொண்டு இருக்கிறார். மற்ற திவ்விய தேசத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி உடன் இடது பக்கத்தில் ஸ்ரீ லட்சுமி தேவி அமர்ந்து இருப்பார்கள்.

எனவே பிரதோஷ நேரமானது மனித சமுதாயத்திற்கு மட்டும் அல்லாது தேவதி தேவ மூர்த்திகளின், பல அவதார மூர்த்திகளின் பூஜை நேரமாகவும் அமைந்திருப்பதனால் தான் பிரதோஷ நேர பூஜையானது மிகுந்த மகத்துவம் பெற்று விளங்குகிறது.

எனவே பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வணங்கி அவருடைய அருளை பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவோம்..