Friday, October 20, 2023
HomePurana Kathaigalகாரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு பகுதி - 1

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு பகுதி – 1

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு பகுதி – 1

அம்மையாரின் இளமைக் காலம்:

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும் மற்றும் மூத்தவருமாவார். இவரின் இயற்பெயர் புனிதவதி. சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். ஓவியம் போல அழகுடைய புனிதவதியார் சிறுவயது முதல் சிவபக்தியில் திளைத்தார்.

சிவ ஆலயத்தை சுத்தம் செய்வது, கோலமிடுவது, அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவந்து தருவது, விளக்கேற்றுவது மட்டுமே இன்றி தன் இல்லம் தேடிவரும் சிவ பக்தர்களை வணங்கி உணவிட்டு வந்தார்.வளர்ந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் புனிதவதியின் தந்தை தனதத்தன்.

இல்லறம்:

அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான்.

அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள்வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.
இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான்.புனிதவதியார் அவைகளை வாங்கி வைத்தார்.

பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், “சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை” என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார்.

அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார். பின், பரமதத்தன் பகலிலே வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, “மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை” என்றான்.

மாங்கனி பெறுதல் :

புனிதவதியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்து விழுந்து. அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் “இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்” என்றான்.

புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் தமக்குத் திருவருள் உதவிய திறத்தை நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, “நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது” என்றான் புனிதவதியார்.

இதை நம்பாத புனிதவதியார் கணவன் “என்ன பகல் கனவு காண்கிறாய்” என்றார்.
இதை கேட்ட புனிதவதியார் மனம் கலங்கி “நான் கூறுவது அனைத்தும் உண்மை” என்றார். “நீ கூறுவது உண்மை என்றால் மற்றோறு கனி கொண்டு வா” என்றார் புனிதவதியார் கணவன் பரமதத்தன்.

புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, “இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்” என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்து விழுந்தது.

மகிழ்ச்சி அடைந்த புனிதவதியார் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான்.

அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.
பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார்

புனிதவதியாரின் கணவன் ஆகிய பரமதத்தன் புனிதவதியார் தெய்வ பிறவி என்பதை உணர்ந்து அவர்களை விட்டு பிரித்து மற்றோறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.அவனுக்கு அம்மனைவிக்கும் பெண்குழந்தை பிறந்தது. அவன் வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியாருக்கு. சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, பரமதத்தனிடம் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, புனிதவதியாரிடம் நடந்தது சுற்றத்தார் கூறினார்கள்.

அதை கேட்ட புனிதவதியார் தன் கணவன் பரமதத்தன் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லுமாறு வேண்டினார். சுற்றத்தாரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு பரமதத்தனிடம் சென்றார்கள்.

பரமதத்தன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, “அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்” என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான்.

உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, “நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை காரியம்” என்றார்கள். அதற்குப் பரமதத்தன் “இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன்; இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்’ என்றான்.அதுகேட்ட சுற்றத்தார்கள் ‘இது என்ன ஆச்சரியம்” என்று திகைத்து நின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

Most Popular