குழந்தைகள் விரும்பும் கிரேப்ஸ் ஃபுட்டிங் செய்யலாம் வாங்க…
திராட்சையில் உள்ள வைட்டமின் சி நம் உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் ஆகிய தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உறுதியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும். திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் தான் புற்றுநோய் உண்டாக்கும் செல்களுடைய பரவுதலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
அதிலும் கருப்பு திராட்சைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் உடையவை. இரத்த சர்க்கரையை உயர விடாமல் பார்த்துக்கொள்ளும். நீரிழிவு நோய் வரும் காக்க இது நல்ல தேர்வு. இந்த பழங்களை உண்பதால் சர்க்கரை வியாதி வரும் அபாயத்தை குறைக்கலாம். எனவே இந்த திராட்சை பழத்தை வைத்து சுவையான ஃபுட்பிங் செய்யலாம் வாங்க.
கிரேப்ஸ் ஃபுட்பிங் செய்ய தேவையான பொருட்கள்:
1. கருப்பு திராட்சை – 2 கப், (நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்)
2. தண்ணீர் – 3 கப்,
3. சோளமாவு – 1/4 கப்,
4. சர்க்கரை – 1/2 கப்,
5. டூட்டி ஃப்ரூட்டி – 1 கைப்பிடி அளவு.
செய்முறை விளக்கம்:
1. முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் திரட்சையை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள திராட்சையை சேர்த்து அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும் .
2. பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
3. அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வடிகட்டி வைத்துள்ள சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 கப் சோள மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
4. பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு டூட்டி ஃப்ரூட்டியை தூவி குளிர் சாதன பெட்டியில் உள்ள உரைப்பானில் 2 மணிநேரம் வைத்து எடுத்தால் நமது அருமையான கிரேப்ஸ் (திராட்சை) ஃபுட்டிங் தயார். திராட்சை பழத்தை விரும்பாத குழந்தைகளுக்கு இது விருப்பமான ஃபுட்பிங் ஆக இருக்கும்.
