சுவாமி ஐயப்பன் வரலாறு பாகம் 16

1234

நேற்றைய தொடர்ச்சி..
புலிகளுடன் தன் தாயை பார்க்க சென்ற மணிகண்டன் பந்தள ராஜாவின் பெருமிதம் :
மணிகண்டன் புலிகளுடன் அரண்மனைக்குள் நுழைந்த செய்தியானது, அரண்மனையில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சென் றடையவே அனைவரும் அந்த காட்சியை காண விரைந்து வந்து புலியின் மீது வீற்றிரு ந்த மணிகண்டனை கண்டு வியந்து நின்று கொண்டிருந்தனர்.
புலிகளின் மீது வனத்தின் ராஜாவான சிங்கம் போன்று அமர்ந்திருப்பதை கண்ட மன்னனும் தனது மகனை நினைத்து பெருமிதம் கொண் டார். தன்னை அறியாது தன் மகனின் அருகில் செல்ல முயற்சிக்க புலிகள் என்று பாராமல், தன் மகன் இருக்குமிடமான புலியின் மத்தியி ல் அவரை சென்று அவரை அரவணைத்து பெருமிதம் கொண்டார்.
இதைப்பார்த்த மற்றவர்களுக்கு மன்னனின் செய்கையால் ஒருவிதமான பயம் உண்டாயி ற்று. புலிகளால் மன்னன் தாக்கப்படுவார் என்ற பயமே அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. இருப்பினும் புலிகள் அமைதியுடன் இருந்தது கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.
தாயை காணுதல்:
பின் தந்தையிடம் தான் கொண்டு வந்திருந்த புலிப்பாலை கொடுத்து, தன்னுடைய தாயின் தலைவலிக்கு தேவையான மருந்து தயாரிக்க இந்த அளவு பால் போதவில்லை எனில் என்னு டன் வந்துள்ள மற்ற புலிகளில் இருந்து எடுத்து என் தாயின் தலைவலியை குணப்படு த்தலாம் என்று மணிகண்டன் கூறினார்.
மணிகண்டனை ஆரத்தழுவிய பந்தள நாட்டு ராஜாவும் நீங்கள் சாதாரணமானவர் அல்ல. நீங்கள் ஒரு தெய்வக் குழந்தையாக இருந்தா ல் எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டினார்.
ஆனால், மணிகண்டன் தன் தந்தையிடம் நான் எவ்விடம் சென்றாலும் நான் உங்களின் மக னே ஆவேன்… என்று உரைத்து தன் தந்தையு டன், தாய் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் அறைக்கு தன்னுடன் வந்த பெண்புலிகளுடன் சென்று கொண்டிருந்தார்.
சுய உருவம் அடைந்த தேவர்கள். கேள்வி கேட்ட மன்னன்.தவறை உணருதல் :
மணிகண்டனின் அன்னையோ புதல்வன் கொ ண்டு வந்திருந்த புலி பாலையும், புதல்வன் உடனிருந்த புலிகளையும் கண்ட மாத்திரத்தில் தான் செய்த தவறை உணர்ந்து, ஐயனே என் மகன் அரசாள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் தவறிழைத்து விட்டேன். என்னை மன்னி த்துவிடுங்கள்… என்று கூறி மணிகண்டனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.
அன்னையே என்ன காரியம் செய்துவிட்டீர்கள் நான் என்னிலைக்கு சென்றாலும் நீங்கள் என்னுடைய அன்னையாவீர்கள். என்னை ஈன்றெடுக்கா விட்டாலும் என்னை சரியான முறையில் வளர்த்து ஆளாக்கிய வரும் தாங்க ளே. தாங்கள் எது செய்தாலும் அது எனது நன்மைக்கே ஆகும் என்று கூறினார்.
அவ்வேளையில் ராணிக்கு உதவியாக இருந்த முதலமைச்சரும், அரண்மனை வைத்தியரும் அவ்விடம் வந்து தாங்கள் இழைத்த தவறுக ளை மன்னித்து எங்களையும் அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார்கள்.
தண்டனை வழங்குதல்:
முதலமைச்சர், மருத்துவர் மற்றும் ராணி ஆகி ய மூவரும் இணைந்து செய்த சதிவேலையை அறிந்த மன்னரும் மிகுந்த கோபம் கொண்டு தனது இடையில் இருந்த வாலினை எடுத்து தவறிழைத்தவர்களுக்கு சரியான தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி தண்டனை அளிக்க முற்பட்டார்.
அவ்வேளையில் மணிகண்டன் தனது தந்தை யை தடுத்து, பின்பு அங்கு கூடியிருந்த அனை வரையும் அமைதிப்படுத்தினார். தாங்கள் செய்த செயலால் தான் என் பிறவிப் பலனை என்னால் அடைய முடிந்தது என்றும், நீங்கள் யாவரும் என் வினையின் பயனை செயல்ப டுத்த உதவிய கருவிகள் என்றும், தங்களின் மீது எவ்விதமான தவறும் இல்லை என்பதை தன் தாய் தந்தையிடம் எடுத்துக்கூறினார்.
சுய உருவம் அடைதல்:
பின்பு தன்னுடன் வந்த புலிகளை நோக்கி தேவர்களே, தங்களின் சுய உருவம் அடைவீ ர்களாக என்று கூறினார். அங்கு வந்திருந்த தேவர்கள் அனைவரும் புலி உருவத்திலிருந்து தங்களது சுய உருவத்தை பெற்று அங்கிருந்த அனைவருக்கும் காட்சி அளித்தனர். அக்காட்சி யைக் கண்ட அனைவரும் நிகழ்வது யாதெ ன்று அறியாமல் மணிகண்டன் தெய்வ அம்சம் கொண்டவர் என்பதை மட்டும் நன்கு அறிந்து கொண்டார்கள்.
அங்கு நடந்து கொண்டிருப்பது என்னவென்று புரிவதற்குள், பந்தள நாட்டு வேந்தனோ தன் மகனிடம் யார் இவர்கள்? உன்னுடன் புலி உருவத்தில் வந்துள்ளார்கள். நீர் சொன்னதும் அவர்கள் தன்னுடைய சுய உருவத்தை அடைந் தார்கள். அப்படியாகையில் நீ யாரப்பா? என்று மகனை தழுவி கேட்டுக்கொண்டு இருந்தார்.
நாளை தொடரும்…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…