Monday, October 23, 2023
HomePurana Kathaigalதங்கம் என்பது என்ன?

தங்கம் என்பது என்ன?

பரீட்சித்து மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும்பிறந்தவன்.

குருச்சேத்திரப் போரில்கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது, பரிட்சித்து உத்திரையின் கருப்பத்தில் இருந்தவன்.

குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன்பிரம்மாசுரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது

கிருஷ்ணர் பரிட்சித்தை காப்பாற்றுகிறார்.

 

கிருஷ்ணரும் பாண்டவர்களும்உலகைவிட்டு நீங்கு பின் குரு நாட்டின்அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து, கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான்.

பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது

ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர்விட்டுக் கொண்டு

நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை.

கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள்.

திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது.

துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது.

கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை.

அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி.

கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறார் பூமித்தாய்.

தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது.

ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக காவு கொடுக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன.

சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன்.

தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன்.

பரீட்சித்து மகாராசாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கண்ணபிரான் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட அடி எடுத்து வைத்துவிட்டான்.

உடனே வில்லில் அம்பைப் பூட்டி நான் இருக்கும் வரையில் தருமம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கணை தொடுக்கத் தயாராகிறான்.

கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து. வில்வித்தையில் சிறந்தவன்.

கலிபுருஷன் பரீட்சித்து மகாராசாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது தானே முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. கெஞ்சுகிறான்

 

பரீட்சித்துவிடம்.“இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள்.

நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன்.”

பரீட்சித்து மகராசா நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்கிறான்.

1) சூதாட்டம் ஆடும் இடம்

2) மது அருந்தும் இடம்

3) மங்கைகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு பணிபுரிபவர்கள் வசிக்கும் இடம்

4) பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை.

இந்த நான்கும் ஒன்று சேர்கிற இடத்தை எனக்குக் காட்டி அங்கேயும் வாசம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.

தங்கத்தை சுட்டிக்காட்டினான் பரீட்சித்து.
எனவே தான்கலிகாலத்தில் சூதாட்டம், மது அருந்துதல், பெண்டிர் சுகம்,
புலால் விரும்புதல், தங்க ஆபரண்ங்களை விரும்புதல்

ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கும்படி பெரியவர்கள் சொல்கிறார்கள்.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

Most Popular