தந்தை சிவபெருமான் அருளிய பெளர்ணமி அன்று படிக்கவேண்டிய சத்ய நாராயண கதை

546

சத்யுகம் நறுமணம் வீசும் தென்றல்…சூரியன் குளிர்ந்தபௌர்ணமி போன்ற கிரணங்களை வீசிக்கொண்டிருக்க..மதுராவிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்துகொண்டிருந்த இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணன்.. அமராவதி நகருக்கு அருகே இருந்த அந்த அழகிய நந்தவனத்தில் புஷ்பக விமானத்தை இறக்கினார்..ஸ்ரீ கிருஷ்ணனின் மனம் அந்த நந்தவன அழகில் மயங்கியது சற்று சிறிது நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பின்தொடர்ந்த அவரது நண்பர்களும் அங்கே வந்து சேர..ரம்யமான அந்த இடத்தில்
ஸ்ரீ கிருஷ்ணர் தனது ரத்தினம் பதித்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.. அங்கிருந்த மயில்களும்.. அன்னப் பறவைகளும் மற்ற பறவை இனங்களும் அங்கே வந்து சேர்ந்து தன்னை மறந்து நடனமாட துவங்கின.. இதைக் கண்டு ஆனந்தமடைந்த ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர்களும் மெய்மறந்து ஆடத்துவங்கினர்.. மேலே பறந்து கொண்டிருந்த வெண்மேகம் கீழிறங்கி அவர்கள் அனைவரையும் தழுவி சென்றது.. அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனை நதியில் மீன்கள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தின..அங்கே தங்க ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணரும் மெய்மறந்த நிலையிலிருந்தார்..சிறிது நேரம் எங்கும் தேன் அமைதி நிலவியது.அனைவரும் மாளிகை திரும்பலாம் என்று புஷ்பக விமானத்தின் அருகில் செல்லும்பொழுது.. கல..கல..வென்று மெல்லிய மணியோசையாக அந்த சிரிப்பு சப்தம் கேட்க.. கிருஷ்ணனுக்கு அந்த சிரிப்பின் சப்தம் தனது புல்லாங்குழல் சப்தத்தை விட இனிமையாக மனதில் ஒலித்தது நண்பர்களே,சிறிது நேரம் இங்கேயே அமருங்கள் இதோ வந்து விடுகின்றேன்..என்று சொன்ன கிருஷ்ணர்.. சப்தம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தார்.. கிருஷ்ணர் அந்த இடத்தை நெருங்க.. நெருங்க.. பல பெண்களின் சிரிப்பு சப்தமும் பாடலுடன் ஒலித்தது.ஸ்ரீ கிருஷ்ணரை போலவே தனது தோழிகளுடன் ஊஞ்சலில் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டும்..பாடிக் கொண்டும் இருப்பதை பார்த்த ஸ்ரீகிருஷ்ணர் அந்தப் பெண்ணின் அழகில் தன்னிலை மறந்து நின்றார்..ஒரு வழியாக மகிழ்ச்சியாக ஆடிப் பாடிகொண்டிருந்த பெண்கள்..புறப்பட தயாரானார்கள்..கூட இருந்த தோழி ராதே
நாம் கிளம்பலாம்.. நாளைக்கும் நாம் இந்த பிருந்தாவனத்துக்கு வருவோம் என்று சொல்ல ராதையும் சிரித்துக்கொண்டே சரி என்று சொல்ல, அனைவரும் புறப்பட்டார்கள் ராதையின் புஷ்பக விமானத்திற்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன்.. மெல்லிய குரலில் “ராதே என் ராதே” என அழைத்தார்.. சப்தம் வந்த திசையை நோக்கி மெல்ல திரும்பிய ராதை ஸ்ரீ கிருஷ்ணர் நின்றிருப்பதை பார்த்து பேசவே முடியாமல் நின்றாள்..ஒரு நொடியில் இருவரது மனமும் பல யுகங்களில் பழகியதைப்போல ஒன்று கலந்தன உலகத்தில் முதலில் தோன்றிய புனிதமான காதல் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் ஸ்ரீராதையினுடயது வேறெதுவும் பேசமுடியாத ராதையிடமிருந்து.. “தாங்கள்”என்ற மெல்லிய சப்தம் மட்டும் காற்றில் கலந்து வந்தது..மெல்ல புன்னகைத்த ஸ்ரீ கிருஷ்ணன் மதுராபுரியின் இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணன் என்று சொல்ல.. சொல்லி முடிப்பதற்க்குள் தன்னை அமராவதியின் இளவரசி என அறிமுகம் செய்தாள்.. ராதை.. கண்ணோடு கண் கலந்த அந்த காதல் பிருந்தாவனம்..மற்றும் சத்யுகத்தின் அனேக பகுதிகளில் தொடர்ந்தது.. ஸ்ரீ கிருஷ்ணர் திருமண வயதை நெருங்கியவுடன் தனது விருப்பத்தை தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க அகமகிழ்ந்தனர் பெற்றோர்கள்..ஸ்ரீ ராதை..ஸ்ரீ கிருஷ்ணரின் திருமணம் மிகப்பெரிய விழாவாக துவாரகாவில் கொண்டாடப்பட்டது..
ஸ்ரீ கிருஷ்ணருக்கு உலகின் அரியாசனம் வழங்கப்பட்டு உலகின் மகாராஜாவாக மகுடம் சூட்டப்பட்டது..வானில் இருந்து தங்க புஷ்பங்கள் பூமாரி பொழிய ஸ்ரீகிருஷ்ணருக்கு ஸ்ரீ நாராயணன் என்ற பெயர் சூட்டப்பட்டது…
ஸ்ரீ ராதைக்கு..ஸ்ரீ லக்ஷ்மி என்ற பெயர் சூட்டப்பட்டது..உலகத்தின் ஒரே பாரத கண்டம் மட்டுமே இருக்க சுவர்க்கத்தின் அதிபதியாக ஸ்ரீ நாராயணரும்..ஸ்ரீ லக்ஷ்மியும் திகழ்ந்தனர் இந்த சத்யுகமே வைகுண்டம்.. ஸ்வர்க்கம்.. என்றழைக்கப்பட்டது.16 கலைகளில் நிரம்பியவர்கள்..அனைத்து தெய்வீக குணங்களிலும் நிரம்பியவர்கள் ..எந்த தீய குணங்கள் அற்றவர்கள்..மரியாதைக்கு உரிய உத்தமர்கள்.. அஹிம்சயினுடைய தர்மத்தை சேர்ந்தவர்கள்.அதாவது இவர்களுடைய தர்மமே ஆதிசனாதன தேவி..தேவதா.. தர்மம் என அழைக்கப்பட்டது..இவர்களுடைய வம்சமே சூரியவம்சம் என அழைக்கப்பட்டது.. இவர்களுடைய யுகம் தங்கயுகம் என அழைக்கப்பட்டு தெய்வீகராஜ்யமாக திகழ்ந்தது 1/1/1 என்று ஆரம்பித்த ஸ்ரீ நாராயணரின் ஆட்சியில்..உலகமெங்கும் ஒரே பாஷை..ஒரே ராஜ்ஜியம்..அமைதியும் செழிப்பும் நிறைந்த பொற்காலமாக இருந்தது.(ஸ்ரீ கிருஷ்ண உலகம் எப்படி இருக்கும் என்ற கட்டுரையில் நீங்கள் படித்து பார்த்ததை இங்கே நினைவு கூறவும்) 1250வருடங்களே நிரம்பிய சத்யுகத்தில் ஒருவரின் அதிக பட்ச ஆயுள் 150 வருடங்கள்..ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆண் குழந்தை..ஒரு பெண் குழந்தை உண்டு.. 150 வயது வரை 16 வயது இளமை.. 8 பிறவிகள் சத்யுகத்தில்.. முதலாம் நாராயணரின் மகன் இரண்டாவது அரசராக முடி சூட்ட.. ஒருவர் பின் ஒருவராக 8 சக்ரவர்த்திகள் சிம்மாசனத்தில் அமர்கின்றனர் மரணத்தின் பொழுது..தானே…ஒரு வயதான உடலைவிட்டு இன்னொரு உடல் எடுப்பார்கள்.. அது அமர உலகம் அங்கே துக்கமில்லை.. 9லட்சம் ஜனத் தொகையில் ஆரம்பித்த சுவர்க்கம் 1250 வருட முடிவில் சத்யுகம்.. 1/1/1251லிருந்து திரேதா யுகம் ஆனது..10 கோடி மக்கள் தொகையில் ஆரம்பித்த திரேதா யுகம்..வெள்ளியுகம் என அழைக்கப்பட்டது… அதாவது தங்கம் வெள்ளி ஆனது..14 கலைகள் கொண்ட திரேதாவில் வெள்ளியின் உபயோகம் அதிகம் இருந்தது.. கலைகள் நிரம்பிய ராஜ்யத்தின் அடையாளமாக ஸ்ரீ கிருஷ்ணருக்கு தங்க புல்லாங்குழலும்.. கலைகள் குறைந்ததன் அடையாளமாக ஸ்ரீ ராமருக்கு வில்லும்,அம்பும் அடையாளமாக காண்பிக்கப்பட்டுள்ளது. கலைகள் குறைந்த காரணத்தால் வெள்ளி யுகம் பாதி சுவர்க்கம் என்றே அழைக்கப்பட்டது.. பிறவிகளும் அதிகமாகின அதாவது 12 பிறவிகள் ஆகி விட்டது.சத்யுகத்தின் 8வது
ஸ்ரீ நாராயணன் என்றழைக்கபட்ட சக்கரவர்த்தி தன்னுடைய சிம்மாசனத்தை சந்திர வம்சத்தின் முதல் மகாராஜா ஸ்ரீராமச்சந்திரனுக்கு அளித்தார்.. திரேதா யுகத்தின் முதல் மகராஜா ஸ்ரீராமசந்திரன் சிறப்பாக தனது ஆட்சியை துவக்கினார்.. முதலாம் இராமரில் துவங்கி ஒன்றன் பின் ஒன்றாக 12 சந்திரவம்ச சக்கரவர்த்திகள் சிம்மாசனத்தில் அமர்ந்தனர்.. பிறவிகள் அதிகமாக..அதிகமாக..குடும்ப எண்ணிக்கையும் அதிகமாகியது..திரேதா இறுதியை அடைய..அடைய..குடும்பத்தில் 3 மேலும்,4 குழந்தைகள் கூட பிறக்க ஆரம்பித்தனர்.திரேதாவின் 12 வது சக்கரவர்த்தி தன்னுடைய பதவியை நிறைவு செய்யும் பொழுது 33 கோடி ஜனத்தொகையை எட்டி இருந்தது திரேதாயுகம்..இவர்களே
33 கோடி தேவர்கள் என பின்னாளில் அழைக்கப்பட்டனர்.. ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்யத்தில் கம்சனோ..ஸ்ரீ ராமச்சந்திரன் ஆட்சியில் ராவணனோ கிடையாது..அப்படி அசுரன் அங்கே இருந்தால் அதை சுவர்க்கம் என அழைக்கமுடியாது..இப்படி ஒரு வழியாக ராம ராஜ்யம் என்னும் சுவர்க்கம் நிறைவுக்கு வந்தது..1/1/2501ம் வருடம் வானம் கரும் முகில்களுடன் மின்னல் வெட்டிக்கொண்டு இருந்தது..ஒரு வழியாக திரேதா யுகத்தின் கடைசி சக்கரவர்த்தி 33 கோடி மக்களுடன் தனது ஆட்சியை நிறைவு செய்திருந்தார்.. அன்று மக்களும் தனக்குள் இனம்புரியாத புது உணர்வுகளுக்கு ஆட்பட்டனர் ஏதோ ஒன்று நடக்க இருப்பதை அவர்களால் உணரமுடிந்தது லேசாக பூமிஅதிர்வது அவர்களுக்கு தெரிந்தது இதுவரை சுகத்தை மட்டுமே அனுபவித்திருந்த அவர்களால் புதுமையான ஒரு உணர்வை அவர்களுக்குள் தோற்றுவித்தது..அதுவரை ஆன்ம உணர்வில் வாழ்ந்த அவர்கள்..ஆன்மா என்பதை மறந்திருந்தனர்…முதன் முறையாக ஆன்ம உணர்வை மறந்து குற்றப்பார்வையில் வந்திருந்தனர்..ஒவ்வொரு ஆணும் இவள் பெண் என்ற உணர்வில் பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு பெண்ணும் இவன் ஆண் என்ற பார்வையில் பார்க்க ஆரம்பித்தாள்.ஆன்ம உணர்வு அங்கே இழந்து உடல் என்ற தேக உணர்வில் வர ஆரம்பித்தனர்.தனக்கு சொந்தமானவளை பார்த்து இன்னொரு ஆண் சிரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவன்.. சிரித்தவனை எச்சரிக்கை செய்தான்..இவள் “என்னுடைய”வள்..” நான்”மட்டுமே இவளுக்கு உரிமையானவன் என்று உரத்த குரலில் வெளிப்படுத்தினான்..முதன் முதலில் மனிதனுக்குள் வந்த “நான்” “என்னுடையது” மண்,பொன்,பெண்,என்று பல விதங்களில் அவனுக்குள் தீய எண்ணங்களை உற்பத்தி செய்தது..செல்வம்.. பதவி..சுகம்.. குடும்பம் எல்லாவற்றிலும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள…பிறரை குறை சொல்ல ஆரம்பித்த காலம் அது..மனிதனுக்குள் காமம், கோபம், பேராசை,பற்று, அகங்காரம்.. என்ற ஐந்து தீய குணங்கள் வேரூன்ற ஆரம்பித்தன.. ஒவ்வொரு ஆணுக்குள்ளும்,பெண்ணுக்கும் பரவிய இந்த ஐந்து விகாரங்கள் இருவருக்குள்ளும் சேர்ந்து 10 தலை ராவணனாக சர்வ வியாபியாக பரவியது.. முதன் முதலில் பூமியின் அதிர்வை உணர்ந்த மனிதன் அவனுக்குள் பயம் என்பதை முதன் முதலாக உணர்ந்தான்.. ஆதாம்..ஏவாள் சொர்க்கத்தில் துரத்தப்பட்ட பின் துன்பம் அடைந்தார்களே அதைப்போல வாஸ்தவத்தில் நமது பிரம்மா, சரஸ்வதியை மற்ற தர்மங்கள் ஆதாம்,ஏவாள்ஆதம்,பீபீ.என்றழைக்கின்றன.

மனிதனுக்கு பயம் தொற்றிக்கொள்ள பாதுகாப்பான இடத்தை தேட ஆரம்பித்தான்.. இருண்ட வானம் பேரிடியை முழங்க..மழை பெரும் துளிகளாய் பூமியை இடைவிடாமல் நனைக்க துவங்கியது அருகிலிருந்த மலைகள் வெடித்து நாலா புறமும் நெருப்பை கக்கின.. பூமி அதிர்வுகள் பெரும் இடியைபோல சப்தம் எழுப்பி காதைப் பிளந்தன அதிர்ச்சியடைந்த மக்கள் நாலா புறமும் சிதறி ஓட…கடல் பெரும் ஓசையுடன் பொங்க ஆரம்பித்தது..மிகப்பெரிய ஆழிப் பேரலைகள் புறப்பட்டு எல்லாப் பகுதிகளையும் துவம்சம் செய்தன..கடலுக்குள் இருந்து புதிய நிலப்பரப்புக்கள் வெளிப்பட ஆரம்பித்தன.. சிதறி ஓடிய மக்கள் கூட்டம்..
எந்த நிலப்பரப்பு வெளிப்பட்டதோ அங்கே தஞ்சமடைந்தனர்.. மற்ற கண்டங்கள் அனைத்தும் நீரிலிருந்து வெளிப்பட்டு பல்வேறு கண்டங்கள் ஆகி இருந்தது..வயிற்று பிழைப்புக்காக மெல்ல,மெல்ல மனிதக்கூட்டம் ஒவ்வொரு கண்டமாய் நகர்ந்தது..அன்று, வானம் நீல நிறமாக தெரிய பிரகாசமாக சூரியன் உதித்தது..எல்லா செல்வங்களும்.. தங்க மாளிகைகளும், புஷ்பக விமானங்களும் காணாமல் போயிருந்தன.. மீதி கையிருப்பில் இருந்த ஆபரணங்கள் பாரத மண்ணில் ஒவ்வொருவரிடமும் மலைபோல இருந்தன.. வம்சாவளியாக வந்த சிம்மாசனம் மட்டும் கைக்கு கிடைக்க..அதில் முடி சூட்டிக் கொண்டு அமர்ந்தார் ராஜா விக்ரமாதித்தன்.. தலையில் பொறுப்பின் கிரீடமும்.. ஒளிவட்டம் உள்ள தூய்மையின் இரண்டுகிரீடம் இருந்த தேவதைகளின் ஆட்சி நிறைவுற்று.. ஒற்றை கிரீடம் அணிந்த மன்னர்கள் ஆட்சி ஆரம்பித்த அதுவே, துவாபர யுகம் என்று அழைக்கப்பட்ட செம்பு யுகம்..8 கலைகளுடன் ஆரம்பித்த இந்த யுகம்.. மனிதனின் நேர்மை குறைந்ததால் பிறவிகள் 21 ஆயின..ராஜா விக்கிரமாதித்தர் அன்று மிகப்பெரும் கவலையில் இருந்தார். மக்களை நெறிப்படுத்தி எப்படி அழைத்து செல்வது என்பதே அவரது கவலை. அரண்மனை மாடத்தில் மிக ஆழ்ந்து சிந்தித்தவாறே தன்னையும் அறியாமல் மேல் நோக்கி இதற்க்கு என்னதான் வழி என்று தனிமையில் உரக்க கத்தினார்..சிறிது நேரத்தில் அங்கே ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட அவர்முன் பிரகாசமான ஒளி தோன்றி “அதற்கு யாமே வழி என்றது”-ஒன்றும் பேச முடியாத விக்ரமாதித்தன் தன்னையும் அறியாமல் கையெடுத்து வணங்கினான்.. அய்யனே தாங்கள் யார் என்று வினவ..”யாமே சிவம் உலகை படைத்தவர்..உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் கட்டிக்காப்பவர் எம்மை வழிபட சகல துன்பங்கள் அனைத்தும் விலகி மக்கள் நற்பேறு பெறுவார்கள்”என்று சொல்லி காட்சி மறைந்தது..உற்சாகமடைந்த விக்ரமாதித்யன் சோம்நாத் கோவிலை குஜராத்தின் கடற்கரை ஓரமாக தங்க கோவிலாக நிறுவினார்..அதில் பிரகாசமான வைர லிங்கத்தை நிறுவினார்..கோவிலுக்கு உபரி வருமானத்திற்க்காக ஆயிரக்கணக்கான நிலங்கள் எழுதப்பட்டது..பொன்..பொருள்.. காணிக்கைகள் மலைபோல குவித்தான் ராஜா விக்ரமாதித்தன்..மெல்ல செம்பு யுகத்தில் அதாவது செம்பில் பாசானம் பிடிக்க ஆரம்பித்தது.விக்ரமாதித்ய ராஜாவுக்கு பின் வந்தவர்கள் அந்த (போஜராஜனை தவிர) சிம்மாசனத்தில் அமரும் தகுதியை இழந்தனர்.. சிம்மாசனத்திற்கு பின்னால் இருந்த விஷ்ணுவின் உருவத்தை சிலையாக வடித்து வழிபட ஆரம்பித்தனர்.. மெல்ல..மெல்ல..பிற வழிபாடுகளும்.. அதை வணங்குவதற்கு புராணங்களும்இதிகாசங்களும் வகுக்கப் பட்டன ஒரு இறைவனான சிவபெருமானின் வழிபாடு மெல்ல..மெல்ல.. பல தெய்வங்களில் போய் நின்றது..வியாசர் போன்ற முனிவர்கள் தன்னுடைய மனக்காட்சியில் பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறை பார்த்தவர்கள்..அதை மனிதனுக்கு புரியவைக்கும் பொருட்டு புராணங்களாக வடிவமைத்தனர் சித்தர்களும் மகான்களும் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டுதுவாபரயுகத்தில்தோன்றியவர்களே இதனிடையே பல கண்டங்களுக்கு பிரிந்து சென்ற மக்களுக்கு இறைவன் ஒரு ஜோதி என்ற நல்லறிவை புகட்டும் பொருட்டு சில..சில.. வருடங்களுக்கு இடையே இறை தூதர்களும்..மகான்களும் தோன்றி அவர்களை வழி நடத்தி சென்றனர்.இப்படியாக அந்தபக்கம் பல்வேறு தர்மங்கள் வளர்ந்துகொண்டிருந்தன இந்த பக்கம் தன்னை சனாதன தர்மம் என்று மறந்து போயிருந்தவர்கள்..சிந்து நதியோரம் தனது இருப்பிடத்தை அமைத்து வசித்தால் சிந்து சமூகம் என்றழைத்து..நாளடைவில் இது ஹிந்து சமூகமாகி அவர்கள் வசிக்குமிடம் இந்தியா என்றழைக்கபட்டது. செம்பு யுகத்தில் பாசானம் என்ற பாவம் அதிகரிக்க.. அதிகரிக்க 1/1/3751ம் வருடம் இரும்பு யுகமான கலியுகம் பிறந்தது.. மனிதன் கடவுளை விட்டுவிட்டு இயற்கை.. விலங்குகள்..பறவைகள் என வணங்கி கடவுளை மறந்தே போனான்.. இதற்கிடையே கஜினி முஹம்மது இந்தியாவில் படையெடுத்து ஒவ்வொரு முறையும் அளவற்ற செல்வங்களை அள்ளிக் கொண்டு போனான்.. கைபர் கணவாயின் வழியாக வந்த அவன்.. பாலைவனம் வழியாக சோம்நாத் கோவிலை கொள்ளையடித்து செல்லும்பொழுது அந்த சுமையை தாங்க முடியாத குதிரைகளையும்.. ஒட்டகங்களையும் தங்க வைரமூட்டையுடன் பாலைவனத்திலேயே விட்டு சென்றான்,என்றால் பாரதம் எப்பேர்பட்ட செல்வ செழிப்புள்ள நாடாக இருந்திருக்கும் கவனியுங்கள். கலியுக ஆரம்பத்தில் இரன்டு கலைகள் இருந்தன.முடிவில் அதுவும் இல்லை. பாவங்கள் அதிகமாக,அதிகமாக.. மனித பிறவியும் 42 ஆகியது..அதாவது சத்யுகத்தில் 8 பிறவி.. திரேதாவில் 12பிறவி.. துவாபர யுகத்தில் 21 பிறவி.. கலியுகத்தில் 42 பிறவி.. தர்மத்தை பூமியில் படைக்கவரும் ஜோதியான தந்தை சிவ பெருமான் ஞானத்தை கொடுத்து மறு வாழ்வு அளிக்கும் ஒரு பிறவி..மொத்தம் 84 பிறவிகளே 84 லட்சம் பிறவிகள் என்பது உலகில் 84 லட்சம் வகையான ஜீவராசிகளை குறிக்கும். பிறவிகளோ வெறும் 84 தான்.. அதற்கு பிறகு நடந்த மொகலாய படையெடுப்பு பிரிட்டிஷ்காரர்களின் அராஜகம் இதெல்லாம் நீங்கள் படித்ததுதான் 1/1/4900ம் ஆண்டு கலியுக இறுதியில் யார் சத்யுகத்தில் இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தாரோ அவரது வயதான உடலில் அதே ஜோதியான சிவபெருமான் பிரவேசமாகி பிரம்மா என பெயர் வைத்து அவரது 5ம் புலன்கள் கொண்ட உடலைரதமாக பயன்படுத்தி கீதை ஞானத்தை வழங்க ஆரம்பித்தார். மீண்டும் இந்த பூமியில்ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்யம் படைப்பதே”யதா.. யதாகிதர்மஸ்ய”என்று அழைக்கப்படுகின்றது. இனிவரும் மூன்றாம் உலகப்போரே மகாபாரத யுத்தம்,இயற்கையின் சீற்றங்களும்..உலகப் போர்களும் மூளும் சமயம் இது, இந்த இறுதி சமயத்தில் யார் ஜோதிவடிவான தந்தை சிவபரமாத்மாவின் ஞானத்தை கேட்டு ராஜ யோகத்தை கற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே சத்யுகம் வருவார்கள்..இது இறைவனின் வாக்கு..இனி பூமியில் நடக்க இருக்கும் சம்பவங்கள் அதை உணர்த்தும். வாழ்த்துக்கள் இதுவே தங்க பாரதம் ஏழை இந்தியாவான சத்தியமான 5000ம் ஆண்டு கதை.இப்பொழுது மீண்டும் பாரதபூமி செல்வந்த சுவர்க்கம் ஆகின்றது.. செல்வந்த பாரத பூமியில் ஸ்ரீகிருஷ்ணருடன் வர விரும்புபவர்கள்.இப்பொழுது சிவதந்தையின் இராஜயோகத்தை அருகிலுள்ள பிரம்மா குமாரிகள் நிலையத்தில் இலவசமாக கற்று பயனடைவீர் வாழ்த்துக்கள்…ஓம்சாந்தி…