ஒரு சமயம் நாரதர் பிரியவிரதனைக் காணச் சென்றார். அவனும் முனிவரை வரவேற்று உபசரித்துப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். அவற்றிற்கெல்லாம் அவர் விடை அளித்த பிறகு சில அபூர்வ, அதசிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள் என்று வேண்டினான். நாரதர் கூறலானார். சுவேதத்வீபத்தில் ஓர் ஏரி உள்ளது. நாரதர் அங்குச் சென்றபோது அந்த ஏரி மலர்ந்த கமலங்களுடன் விளங்கியது. மலர்களுக்கு அருகில் ஓர் அழகிய பெண்மணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவளை யாரென்று அவர் கேட்டார்.
அதற்கு அவள் பதிலளிக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடலிலிருந்து மூன்று ஒளி உருவங்கள் தோன்றி மறைந்தன. நாரதர் திகைத்து நின்றார். அவள் யாரென்று நாரதர் மறுபடியும் கேட்டார். அதற்கு அவள் தான் சாவித்திரி என்றும், வேதங்களின் தாய் என்றும் கூறினாள். நாரதரால் அவளை அறிய முடியாதென்றும், அவருடைய அறிவை எல்லாம் தான் கொள்ளை அடித்து விட்டதாகவும் கூறினாள். தன்னிலிருந்து வெளியேறிய மூன்று உருவங்களும் மூன்று வேதங்கள் ஆகும். (மூன்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.)
அப்போது நாரதர் தன் அறிவை எப்படி திரும்பப் பெறுவது, சாவித்திரி நாரதரை அந்த ஏரியில் குளிக்குமாறும், அதனால் அறிவைத் திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முற்பிறவி செய்திகளும் அறிய முடியும் என்றாள். நாரதர் அவ்வாறே அதில் நீராடி இழந்த அறிவையும், முற்பிறவி பற்றியும் அறிந்திட்டார். பிரியவ்ரதன் அவரை முற்பிறவி வரலாறு கூறுமாறு கேட்டான்.
சத்திய யுகத்தில் நாரதரின் முற்பிறவியில் அவர் பெயர் சாரஸ்வதன் ஆகும். சாரஸ்வதன் அவந்தியில் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் அமைதியாக உட்கார்ந்திருந்த போது வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது என்று உணர்ந்தான். அனைத்தையும் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய எண்ணினான். அவ்வாறே செய்து நாராயணனைக் குறித்து தவம் செய்ய பகவான் அவன் முன் தோன்றிட தன்னை அவருள் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிட, பகவான் நீ இன்னும் வாழ வேண்டும் உன்னுடைய பக்தியும், முன்னோர்களுக்கு அளித்த நீரும் என்னை மகிழ்வித்தன. உனக்கு இன்று நாரதன் (நாரதர் – நீர் அளித்தவர்) என்ற பெயர் அளித்து ஆசிர்வதிக்கிறேன் என்றார்.
பகவான் அருளி மறைந்துவிட்டார். சாரஸ்வதன் தவத்தைத் தொடர்ந்தான். அவன் மரணமடைந்து பிறகு பிரம்மலோகத்தில் இருந்து பின்னர் பிரம்ம புத்திரன் நாரதனானான். அடுத்த நாரதர், பிரியவிரதனுக்கு விஷ்ணுவின் புகழ் கொண்ட ஒரு துதியைக் கற்பித்தார். அது பின்வருமாறு:
எண்ணற்ற கண்கள் கொண்டவர்க்கு வணக்கம்!
கணக்கற்ற கைகால்கள் உடையவர்க்கு வணக்கம்!
சத்திய யுகத்தில் வெள்ளை உடையிலும், அடுத்த
திரேதா யுகத்தில் குருதிரத்த வண்ணத்திலும், பிறகு
துவாபரயுகத்தில் மஞ்சள்நிற உருவிலும், பின்னர்
கலியுகத்தில் கரிய நிறம் உடையவனாகும் மாறிய
(வண்ணம் நிறைந்த கண்ணனுக்கு வணக்கம்)
வாயிலிருந்து பிராமணர்களையும்
புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்களையும்
தொடைகளிலிருந்து வைசியர்களையும்
பாதங்களிலிருந்து மற்ற இனத்தவர்களையும்
(படைத்த பிரம்மனுக்கு வணக்கம்)
மன்னிக்க முடியாத ஐந்து பாவங்கள்
1 பிறர் சொத்துக்களை அடைய நினனப்பவர்கள்…
2 திருமணம் ஆன ஆண் பெண்களை அடைய நினனப்பவர்கள்….
3 பெண்களை இழிவாக பேசுபவர்கள்…..
4 கோழை எனும் தெரிந்து அவனிடம் மோதி அந்த அப்பாவியின் சாபத்தை பெறுவது ….
5 தாய் தந்தையின் சாபத்திற்கு ஆளாவது
வாளும், கேடயமும், கதையும், கமலமும்
நாளும் ஏந்திடும் நாரணர்க்கு வணக்கம்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
