திருஆவினன்குடிப் பெருமாளே!!
*
பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது 3ஆம் படை வீடான ‘திருஆவினன்குடி’, திரு (ஸ்ரீமகாலக்ஷ்மி) + ஆ (காமதேனு) + இனன் (சூரியன்) + கு (பூமி தேவி) + டி (அக்கினி தேவன்) ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ள இத்தலத்தில் ஆறுமுகக் கடவுள் அருணகிரிநாதருக்கு ஜபமாலை தந்து அருள் புரிந்துள்ளான், இந்நிகழ்வினைப் பின்வரும் திருப்புகழில் அருணகிரியார் அகச்சான்றாகப் பதிவு செய்துள்ளார்,
–
அபகார நிந்தைபட்டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
–
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நானினைந்தருள் பெறுவேனோ
–
இபமாமுகன் தனக்கிளையோனே
இமவான் மடந்தைஉத்தமிபாலா
–
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருஆவினன்குடிப் பெருமாளே.
–
மேலும் திருஆவினன்குடிக்கும், மலையுச்சியிலுள்ள பழனிக்குமாய்ச் சேர்த்து மொத்தம் 97 திருப்புகழ் திருப்பாடல்களை அருணகிரிநாதர் அருளியுள்ளார் என்பது மற்றொரு முக்கியக் குறிப்பு (சிவ சிவ)!!!