மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !

99

பிச்சி, மல்லிகை,பிண்டி,செந்தாமரை
பச்சை,நீலம்,பருத்தி பொற்கோங் கலர்
நொச்சி ஆரம் செவ்வந்தி புனுண்டுளாய்
இச்சையோடும் இறைமுடி சாத்தியே
சாந்து சந்தனம் தண்பன்னீரொடுஊ
சேந்தலிங்க திருமுடி சாத்தியே
வாய்ந்த சேவடி வாழ்த்தி வணங்கிமேல்
ஆய்ந்த சீர்த்திகள் ஆடியும் பாடியும்
உறக்கம் அன்றைக்கு ஒழிந்து முடிவிலா
மறைக் கொழுந்தை வணங்கியும் வாழ்த்தியும்
நிறைந்த சீர்த்திகள் பாடியும் நினமலர்
சிறந்தச் சேவடிச் சேவைகள் பண்ணியே
நாலுசாம மும் சென்றபின் அதனை
மாலை மாமலர் கொண்டு வணங்கியே
காலை தன்னில் கனகம் அசனமும்
சாலும் அன்பினிற் ஆனங் கொடுத்து மேல்
அற்றை நாளும் கடந்தபின் ஆதியை
சொற்ற நன்மலர் கொண்டு துதித்து மேல்
நற்றவக் குருதக்கணை நல்கியே
அற்ற தொண்டர்க்கு அமுது ஈந்துமே
பாரணை அமவாசை முன்பு அண்ணியே
பூரணம் கழல் போற்றும் புராணமும்
சீரணிந்த சிவன் பெருங்கீர்த்தயும்
ஆரணமுடன் கேட்டருள் கொண்மினே
சீர்பெறும் சிவராத்திரிக்கு ஒப்பென
பேரபெரும் பல்விரதமும் பேசிடின்
மேருவோடும் அணுவையும் மின்மினி
சூரியன் ஒளி நேரெனச் செங்குமோ வேறு
பதித்து இரட்டியோடி அரண்டதாம் அற்சரம்பயிற்றி
விதித்திடும் சிவராத்திரி விரதமும்்விடுக்கிற்
கதித்தொண்டர்க்கு கனகமும் கலிங்கமும் வழங்கி
மதித்திடும் சிவராத்திரி யாழிவது வழக்கே.