Saturday, October 14, 2023
HomeSlogamராமநவமி ஸ்பெஷல் !

ராமநவமி ஸ்பெஷல் !

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் மந்திரம்
குற்றம் நீக்கி சுத்தம் செய்து மேன்மை தரும் எந்திரம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சக்கரை
ஆண்டவனே மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் சத்தியம்
மூடம் நீக்கி ஞானம் பெற சொல்ல வேண்டும் நித்தியம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் காவலன்
நம் தேவைகளை தேவனுக்கு கொண்டு செல்லும் ஏவலன்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம்
ராம நாமம் சொல்லும் உயிர் யோக நிலை பெற்றிடும்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் தாரகம்
கன்னம் தொட்டு முத்தமிட்டு அன்பு செய்யும் தாயகம்

ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி
ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 5 =

Most Popular