Saturday, October 28, 2023
HomeUncategorizedமுருங்கைப்பூ சாதம் !!

முருங்கைப்பூ சாதம் !!

மருத்துவக்குணமும், இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூ வைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லைப் போன்ற பிரச்சனைகளை எளிதில் குணமாக்கலாம். இப்போது முருங்கைப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

பாசுமதி அரிசி – 3 கப்

முருங்கைப்பூ – 2 கப்

வெங்காயம் – 3

குடைமிளகாய் – 2

பச்சை மிளகாய் – 4

மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை ஊறவைத்து கொள்ளவும். பின்பு பாசுமதி அரிசியை சுத்தமாக கழுவி, வேகவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்க வேண்டும். குடைமிளகாயை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் முருங்கைப்பூ வை இட்லி தட்டில் வைத்து அரை பதத்துக்கு வேகவைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

கடைசியாக அதனுடன் சாதம், முருங்கைப்பூ சேர்த்து நன்றாக கிளறி, அதில் மெல்லியதாக சீவி வைத்துள்ள குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத் தூள் போட்டுக் நன்கு கிளறி பரிமாறினால், சுவையான முருங்கைப்பு சாதம் தயார்!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 20 =

Most Popular