ஸ்ரீ ராமரஷா ஸ்தோத்திரம் :

388

ராமம் லக்ஷ்மணபூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுந்த³ரம் காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம்‌ | ராஜேந்த்³ரம் ஸத்யஸந்த⁴ம் த³ஸ²ரத²தனயம் ஸ்²யாமலம் ஸா²ந்தமூர்திம் வந்தே³ லோகாபிராமம்

ராமராக இருப்பவரும், லக்ஷ்மணனின் மூத்த சகோதரனும், ரகுவரனும் (ரகு குலத்துக்கு வரமாக வந்தவன்), சீதாபதியும், ராவணனை வதம் செய்தவனும், உத்தமனும், காகுஸ்த வம்சத்தைச் சேர்ந்தவனும், கருணாகரனும், நற்குணசீலனும், வேத தர்மங்களை போற்றுபவர்களை விரும்புபவனும், தர்மசீலனும், அரசர்களில் சிறந்தவனும், சத்தியசீலனும், தசரத புத்திரனும், கருவண்ணம் கொண்டவனும், மென்மையே உருவானவனும், சாந்த ஸ்வரூபியுமான ஸ்ரீராமனை நமஸ்கரித்து வணங்குகிறேன்.

ராமம் லக்ஷ்மணபூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுந்த³ரம் காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம்‌ | ராஜேந்த்³ரம் ஸத்யஸந்த⁴ம் த³ஸ²ரத²தனயம் ஸ்²யாமலம் ஸா²ந்தமூர்திம் வந்தே³ லோகாபி⁴ராமம்

வேதங்களுக்கெல்லாம் ஆதாரமான ராமன், ராமபத்ரன், ராமசந்திரன், ரகு வம்சத்திலேயே சிறந்த நாயகன், சீதபதியான ஸ்ரீராமனுக்கு என் நமஸ்காரங்கள்.

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே | ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம:
ஸ்ரீ ராமா ராமா ரகு நந்தனா ராமா ராமா.

ஸ்ரீ ராமா ராமா பரதனுக்கு மூத்தவனே ராமா ராமா. ஸ்ரீ ராமா ராமா தலை சிறந்த போர் வீரனே ராமா ராமா. ஸ்ரீ ராமா ராமா உன்னைச் சரணடைகிறேன் காப்பாய் ராமா ராமா.

ஸ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஸ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம | ஸ்ரீராம ராம ரணகர்கஸ² ராம ராம ஸ்ரீராம ராம ஸ²ரணம் ப⁴வ ராம ராம | |

ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களை நான் மனதால் த்யானிக்கிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைப் பற்றி நான் வாக்கால் ஜபம் செய்கிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைந்து எனக்கு பாதுகாப்பு வேண்டுகிறேன்

ஸ்ரீராமசந்த்³ரசரணௌ மனஸா ஸ்மராமி ஸ்ரீராமசந்த்³ரசரணௌ வசஸா க்³ருணாமி | ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸி²ரஸா நமாமி ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே

என் தாயாக ஸ்ரீ ராமன் இருக்கிறார் என் தந்தையாக ஸ்ரீ ராமன் இருக்கிறார். என் தெய்வமாக ஸ்ரீ ராமன் இருக்கிறார் என் நண்பனாக ஸ்ரீ ராமன் இருக்கிறார். தயாள குணம் கொண்ட ஸ்ரீ ராமனே எனக்கு எல்லாமாகவும் இருக்கிறார்.

மாதா ராமோ மத்பிதா ராமசந்த்³ர: ஸ்வாமீ ராமோ மத்ஸகா² ராமசந்த்³ர: | ஸர்வஸ்வம் மே ராமசந்த்³ரோ த³யாலு-ர்னான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே |

ரகு நந்தனான ஸ்ரீ ராமனை வணங்குகிறேன். ஸ்ரீ ராமனின் இருக்கைக்குத் தென்பகுதியில் இருக்கும் லக்ஷ்மணனை வணங்குகிறேன். ஸ்ரீ ராமனுக்கு இடப்பாகத்தில் இருக்கும் தாயார் சீதையை வணங்குகிறேன். முற்பக்கம் வீற்றிருக்கும் ஹனுமானை வணங்குகிறேன்.

த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே து ஜனகாத்மஜா | புரதோ மாருதிர்யஸ்ய தம் வந்தே³ ரகு⁴னந்த³னம்‌ |

உலகத்திலுள்ளவர் அனைவருக்கும் ப்ரியமான ஸ்ரீராமா, போர்களத்தில் அசகாய தீரனே, தாமரை கண்ணனே, ரகுவம்சத்தின் தலைவனே, கருணையின் உருவமே, கருணாகரனே, நான் ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைகிறேன்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !