Wednesday, October 18, 2023
HomeMahansமுத்துசுவாமி தீட்சிதர்

முத்துசுவாமி தீட்சிதர்

மார்ச் 24, 1776 – அக்டோபர் 21, 1835

கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். கருநாடக இசை மும்மூர்த்திகளும் தமிழிசை மூவரும் வேறானோர்.

இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் “முத்துசுவாமி” எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர்.

முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார்.

காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.

இசைப்பணி

பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார்.

தீட்சிதர், சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன.

தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.

அவற்றில் “வாதாபி கணபதிம்” (ஹம்சத்வனி) “சிறீமகா கணபதி” (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.

சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார்.

பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் “ஜம்பூபதே” (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்.

பஞ்சலிங்க ஸ்தலக கிருதி – 5 கிருதிகள்
கமலாம்பா நவா வர்ணம் – 9 கிருதிகள்
அபயாம்பா நவா வர்ணம் – 9 கிருதிகள்
சிவ நவா வர்ணம் – 9 கிருதிகள்
நவக்கிரகக் கிருதி – 9 கிருதிகள்
தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று பல்லவி,

அனுபல்லவி,

சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை.

மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணபடும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும்.

அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.

தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன.

ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார்.

தீட்சிதரின் கிருதிகள், இசையில் ஆரம்பப் பயிற்சி பெறும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் சபையில் பாடும் வகையிலும் அமைந்துள்ளன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =

Most Popular