உலகையே உலுக்கி வரும் க்ரூரமான கொராணா எனும் வைரஸால் ஏற்படக்கூடிய வ்யாதி அடியோடு நீங்க பரதேவதையான அம்பாளைப் ப்ரார்த்திப்போம்!!
ஆபத்துக்காலத்தில் அம்பாளை சரணடைய வேண்டும் என்பது ஶ்ரீபகவத்பாதாள் முதற்கொண்ட மஹான்கள் வாக்கு!! இத்தகைய துர்பிக்ஷத்திலிருத்து நம்மை ரக்ஷிக்க வல்லவள் ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா த்ரிபுரஸுந்தரியான அம்பாள் தான்.
“ஶ்ரீசண்டிகா” எனும் அஸாத்யமான வடிவைத் தாங்கி கஷ்டங்களை விலக்கி ஸுபிக்ஷத்தை உண்டுபண்ணக்கூடியவள் அம்பாள். ஶ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் இயற்றிய ஶ்ரீதுர்கா சந்த்ரகலா ஸ்துதி எனும் ஸ்தவத்தைக் காலை மாலை பாராயணம் செய்து, தேசத்திற்கு ஏற்ப்பட்ட பெரும் கஷ்டம் நீங்க ப்ரார்த்திப்போம்!!
