Tuesday, October 17, 2023
HomeArthamulla Aanmeegamஆத்ம வழிபாடு

ஆத்ம வழிபாடு

நம்மில் பலருக்கும் உள்ள உச்சகட்ட பயம் எதுவெனில் ஒருவர் மரணம் அடைந்த பிறகு அவர் ஆவி பேய் பூதம் -மாய் மாறி நம்மை துன்புறுத்துவாரோ என்பது தான் . இது தவறான எண்ணம் . கொலை , தற்கொலை மற்றும் விபத்து இந்த மூன்று காரணிகளால் எதிர்பாரா மரணம் அடைந்தவரின் ஆத்மா மட்டுமே மேலுலகும் செல்ல இயலாமல் புவியிலும் இருக்க இடமில்லாமல் இறைவனிடம் வேண்டி கேட்டு பெற்ற காலம் வரையில் தனது அரூப வடிவில் காற்றில் சுற்றி வரும் . அந்த காலகட்டத்தில் தனது ஆசாபாசங்களை தீர்த்துக்கொள்ள புவியில் ஏதாவது ஒரு வாய்ப்பை தேடி அலையும் . இறை வழிபாட்டால் அந்த தொந்தரவுகள் இன்றி நாம் வாழ இயலும் . உடல் கோவில் மனமே இறைவன் என்று அடிக்கடி கேட்டிருப்போம் , இங்கு மனம் என்றால் என்ன எனபது தான் குழப்பம் . நமது எண்ணங்களின் கூட்டுருவே மனம் . உண்மையில் நம்மில் இருக்கும் ஆத்மாவே இறைவன் . ஆத்மா ஒளி வடிவானது , அது கொண்ட மனித உடல் உறுப்புகள் மூலமாகவே ஆண் பெண் என்று பகுத்து பார்க்கின்றோம் . இங்கு பிறக்கும் ஒரு குழந்தை உறங்கும் போது தானாகவே சிரிக்கும் அதை பலரும் கவனித்திருப்போம் , ஆண்டவன் நரி விரட்டுரார் என்று பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டுருப்போம் . குழந்தைக்கு தன்னுள் பார்க்கும் நிலையே இது . தன்னுள் உள்ள ஆத்மாவை போற்றி இறைவனுடன் தொடர்பில் இருப்பதையே அது குறிக்கும் . வயது ஆக.. ஆக… புறவாழ்வின் ஆசாபாசங்கள் இச்சைகள் கண்ணில் படபட ஆத்மாவை மறந்து வெளியுலக வாழ்வில் திளைத்து போகும் நாம் நம்முள் இருக்கும் ஆத்மாவை துதிக்க மறந்து விடுகின்றோம் . அதே குழந்தை வயது மூப்பின் காரணமாக படுக்கையில் தானே தன்னையறியாமல் மலஜலம் கழித்தும் தானே சிரித்தும் அழுதும் மரணபடுக்கையில் இருக்கும் போதும் நாம் அவர்களை குழந்தை மாதிரி மாறிட்டார் என்று சாதாரணமாக குறிபிடுவோம் . உண்மையில் அது தான் உண்மை . மீண்டும் குழந்தை பருவத்தில் எப்படி ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு இறைவனை வழிபட்டாரோ அதே நிலைக்கு மீண்டும் வந்த நிலையே தன்னை மறந்த முதிர்வயது நிலை . அப்போது தான் தான் இவ்வளவு காலம் செய்த பாவ புண்ணிய கணக்குகளை சித்திரகுப்தர் கூறகூற கேட்டுகொண்டிருப்பார் . ( சித்திரகுப்தர் யார் என்று பிறகு ஒரு பதிவில் பார்ப்போம் ) . எனவே இந்த புற உலக வாழ்வின் சிறிது நேரம் நம்முள் குடிகொண்டுள்ள ஆத்ம வடிவான இறைவனை நோக்கி பார்வைய திருப்புங்கள் . அதற்கு தியானம் செய்ய வேண்டுமா ? இல்லை உங்கள் ஓய்வு நேரத்தில் , இரவு படுக்கைக்கு சென்ற பிறகு எப்போது நேரம் வாய்கின்றதோ அப்போது சற்று நேரம் அமைதியாய் உங்கள் மூச்சு காற்றை கவனியுங்கள் முதலில் தலைவலிக்கும் சிரமமாக இருக்கும் அது வரையில் நீங்கள் செய்தால் போதும் . போக போக….. நீங்கள் அதற்குள்ளே செல்ல ஆரம்பித்து விடுவீர்கள் . மது தான் போதை தரும் என்பதை தவறு என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள் உங்களின் ஆத்மாவை அறியும் போதும் அதனை உணரும் போதும் . கூடுமானவரை அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் முயற்சி செய்யுங்கள் அன்றைய நாள் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை இரவு உறங்க செல்லும்போது எண்ணி பாருங்கள் . ஆத்ம வழிபாடு இறை வழிபாடு ஆகும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

Most Popular