ஆடிப்பெருக்கு நன்நாளில் சுமங்கலி பூஜை செய்வது எப்படி?
ஆடிப்பெருக்கு தினமான நாளை மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?
நிறைகுடத்தில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜை:
ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகளை செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்களப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.
பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
ஆடி அமாவாசையில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் காகங்களுக்கு உணவு வைத்து புண்ணியம் தேடுங்கள். உலர் திராட்சைகளை காகங்களுக்கு வழங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் சேரும். காகங்களுக்கு நல்லெண்ணெய் வழங்கினால் சனி பகவான் பார்வையால் வரும் தீமைகள் குறையும் என்கிறார்கள். சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து காகங்களுக்கு வழங்கலாம்.
காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், அவற்றுக்கு எள் வழங்கினால் சனி பகவானின் அருள் கிடைக்கும். வீட்டுக்கு நன்மை கிட்டும் பழைய சாப்பாடுகள் கட்டாயம் வழங்கக் கூடாது. வீட்டில் மிச்சம் என்று ஆன உணவுகளை கட்டாயம் காகத்திற்கு வைக்க கூடாது. அது நம் முன்னோர்களின் பாவங்களை நமக்கு பெற்றுத் தரும் காகங்களுக்கு எந்த காரணம் கொண்டும் அசைவ உணவுகள் வழங்கக் கூடாது. அது பெரும் பாவத்தை குடும்பத்திற்கு தரும்.
