கேட்டவுடன் பணத்தை கொடுக்கும் முத்திரை

501

சித்தர்களால் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு பொக்கிஷம் தான் முத்திரைகள். இந்த முத்திரைகள் அனைத்துமே முறைப்படி சொல்லப்பட்டவைகள் தான். விரலை வைத்து செய்யப்படும் முத்திரைகளின் மூலம் பஞ்ச பூதங்களையும், நவக் கிரகங்களையும் கூட, தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் சித்தர்கள். முத்திரைகளைக் கொண்டு செய்யப்படும் பயிற்சியை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் நம்மால் நல்ல பலனை உணர முடியும்.

முத்திரைகளை விரல்களின் உதவியைக் கொண்டு தான் செய்கின்றோம். நம்முடைய விரல்களுக்கு அப்படி என்ன தான் சக்தி இருக்கின்றது, என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். பஞ்சபூதங்களும் நம்முடைய ஐந்து விரல்களில் அடக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது. கட்டை விரல் அக்னி சக்தியையும், ஆள்காட்டிவிரல் வாயு சக்தி எனப்படும் காற்று சக்தியையும், நடுவிரல் ஆகாயம் என்று சொல்லப்படும் வின் சக்தியையும், மோதிரவிரல் நிலம் என்று சொல்லப்படும் மண் சக்தியையும், சுண்டுவிரல் நீர் சக்தியையும் அடக்கி உள்ளது.

இதேபோல் நவகிரகங்களின் சக்தியையும் நம்மால் ஐந்து விரல்களில் அடக்கம். கட்டைவிரல் சூரியனுக்கும், செவ்வாய்க்கும் உரியவர்களாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆள் காட்டிவிரல், குரு விரல், வியாழனை குறிக்கின்றது. நடுவிரலை சனிபகவானின் விரல். மோதிர விரல் சுக்கிரனுக்கு உரிய விரல். சுண்டுவிரல் புதனுக்கும், சந்திரனுக்கும் உரிய விரலாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறாக பஞ்ச பூதத்தையும், நவ கிரகங்களையும் நம்முடைய ஐந்து விரல்களில் அடக்கம் என்பதுதான் சித்தர்களின் கூற்று.

முத்திரைகளில் முதல் முத்திரையாகவும், முத்திரைகளின் ராஜாவாகவும் சொல்லப்படும் சிவ முத்திரையை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் எந்த ஒரு முத்திரை பயிற்சி செய்வதற்கு முன்பாகவும், முதலில் சிவ முத்திரை தியானத்தை பத்து நிமிடம் செய்துவிட்டு, அதன் பின்பு மற்ற முத்திரைப் பயிற்சியை தொடங்குவது நல்ல பலனைத் தரும். இந்த சிவ முத்திரையை மூல முத்திரை என்றும் பஞ்சபூத முத்திரை என்றும் குறிப்பிடுவார்கள். உணவு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் கழித்து முத்திரை பயிற்சியில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

சிவ முத்திரை பயிற்சி பஞ்சபூதங்களையும் அடக்கி, நம் உடம்பில் இருக்கும் பஞ்சபூத சக்தியையும் ஒரே சீராக இயங்க வைக்க உதவி செய்கிறது. எப்பவும் போல் தியானம் செய்ய முதுகு தண்டுவடம் நேராக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். சம்மணம் போட்டே அமர்ந்து. இரண்டு கைகளின் ஐந்து விரல்களையும் ஒன்றாக இணையும்படி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மேல் வைத்து 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.வலது தொடையில் வலது கை, இடது தொடையின் மீது இடது கை, தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம்.

அதன்பின்பு பணவரவை தரக்கூடிய லக்ஷ்மி முத்திரை பயிற்சியை செய்ய வேண்டும். உங்களது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு, சுண்டுவிரல் பெருவிரல் மட்டும் திறக்கப்பட வேண்டும். மோதிர விரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் இந்த மூன்று விரல்களையும் மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு உங்களது கைகளை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் பிரிக்கக் கூடாது. அப்படியே உங்களது மடியில் வைத்துக் கொள்ளலாம். இதே முத்திரையில் அமைதியான சூழ்நிலையில் 5 நிமிடம் மகாலட்சுமியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். இந்த தியானத்தை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்லலாம் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது மிகவும் நல்லது. இந்த தியானத்தின் போது சுக்கிர மந்திரமான இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ..

சுக்கிர மந்திரம்: “ஓம் த்ராம் த்ரிம் த்ரோம் சுக சுக்ராய நமஹ” தினம்தோறும் இந்த லட்சுமி முத்திரையை தியானத்தை சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் அற்புத பலன்களை நமக்கு பெற்றுத்தரும். முத்திரைப் பயிற்சியை செய்யும்போது ‘நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அனைத்தும் அழிந்து போக வேண்டும் என்றும், நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்’ என்று மனதார நினைத்துக் கொள்ளவேண்டும். முடிந்தவரை முத்திரை தியானம் செய்பவர்கள் அசைவ சாப்பாட்டை தவிர்ப்பது நல்லது. முதிரையின் பலனை விரைவாக அடைய வேண்டுமென்றால் தொடர்ச்சியான 48 நாள் பயிற்சி அவசியம் தேவை. லக்ஷ்மி முத்திரையைத் தொடர்ந்து செய்து பாருங்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். நீங்கள் செய்யும் செயல் பாட்டில் வெற்றி அடைந்து அதிகப்படியான வருமானத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும்.