Tuesday, October 24, 2023
HomeArthamulla Aanmeegamபிறந்த குறிப்பு இல்லாதவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்!

பிறந்த குறிப்பு இல்லாதவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்!

நம்முடைய வருமானம் என்பது நமக்கு பதவி தரும் செல்வம் ,
பதவி என்பது நாம் முன் ஜென்மாவில் செய்த பாப, புண்ணிய பலனை பொருத்து அமையும் ..

மனிதர்கள் பலவிதமான பட்ட படிப்பு படிப்பது பதவி ஆகாது,
அவர்கள் செய்யும் தொழில் அல்லது அவர்கள் பார்க்கும் உத்யோகம் தான் பதவி எனப்படும் .

ஒன்றுமே படிக்காத ஒரு நபர் நகை வியாபாரம் செய்து நல்ல வருமானம் பெற்றாலும் பெறாவிட்டாலும் அவருக்கு சமுதாயம் தரும் பதவி நகை கடைகாரர் அல்லது நகை வியாபாரி, இவரை போல நல்ல பட்டபடிப்பு படித்த நபர் ஒரு பசுமாடு வைத்து கொண்டு பால் வியாபாரம் செய்து வருமானம் பெற்றால் அவரை சமுதாயம் பால்காரர் என்று பதவி தருவார்கள் .

இதை தான் சோதிடம் கற்கும் பாடத்தில் “பதவி முன் ஜென்மாவில் நீ செய்த பாப, புண்ணிய பலனால் உண்டாகும்” என்று சொல்கிறது.

இங்கே ஒரு கேள்வி பதவிகள் படித்தவர்களுக்கு கிடைப்பது தானே நியாயம்?
படிக்காதவர்களுக்கு ஏன் கிடைக்க வேண்டும்?
படிப்பு நம்முடைய அறிவு சார்ந்த நிலைப்பாடு
பதவி தெய்வத்தின் அருள் ஆசிகள் என்று சொல்ல வேண்டும் .

தெய்வத்தின் அருளும் ஆசிகளும் நமக்கு எப்பொழுது கிடைக்கும் என்று
சிந்தித்து பார்க்க வேண்டும் .
அவர்களை வணங்குவதால் மட்டும் இல்லை, பிற உயிர்களை நாம் கவனித்து அவர்களை மதித்து புரிந்து கொண்டாலே நமக்கு ஆசிகள் கிடக்கும் .

பிறந்த குறிப்பு இல்லாதவர்கள் சோதிட கணக்கை பார்க்க முடியாது,
இவர்கள் உபாசனை கேட்க செல்வர், சிலர் தேவதை கோவில்களில் குறி
கேட்டு கொள்வார்கள் ..

கிரக தேவர்களை நன்கு அறிந்தவன், அவர்களின் கணக்கை புரிந்து கொள்ள
முற்பட்டவர்கள் தான் கோள்களின் வழியாக தலைமுறை சாபம்களை
அறிந்து, அதன் வழி சாபம்களையும் அறிந்து பரிகாரம் வழிபாடுகள் செய்து
துன்பத்தில் உள்ளவர்களை நல்வழி படுத்துவார்கள் ..

அகத்தியர் அவர்கள் சோதிடத்தில் மஹா வல்லமை படைத்தவர் என்று
அவருடைய சோதிட குறிப்புகளை படிக்கும் பொழுது அறிய முடியும் .

ஒரு இஸ்லாமியர் தான் வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் தன்னிடம் எந்த பிறப்பின் குறிப்பும் இல்லை என்றும் சொன்னார் .

அவரின் தந்தை வழிபாடு செய்யும் முறைகளை கேட்ட பொழுது அவர்கள் பிரான் மலை மற்றும் சிகந்தர் மலைக்கு சென்று வழிபடுவார்கள்
என்று புரிந்து கொண்டேன்,
மலை முருகனுக்கு உடையது,
முருகன் ஆக்கத்தின் சக்தி கொண்டவர்,
ஸ்தான பலம் உள்ளவர், இவர் எல்லைக்கு /ஆசிக்கு உட்பட்டவர் உருவாக்கும் தன்மைகளை உடைய செயலை செய்யவேண்டும் என்று சொல்லி அவருடன் கட்டிட வேலை அல்லது அது சார்ந்த வேலை உங்களுக்கு நன்மை தரும் சொல்லி அனுப்பி வைத்தேன் .

இப்படி குல வழிபாட்டை வைத்தும் நம்முடைய ஜீவனத்தை அறிய முடியும் ,

நமமுடைய குலத்தார் அடைந்த நன்மையையும் தீமையும் தான் நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் ஜீவனத்தில் வரும் .

இன்று பலரின் வளர்ச்சி தடைகள் மற்றும் உயிர் பதவிகள்,
மற்றவரின் பொறாமையால் தொழில் அவஸ்தை ஏற்படுவது எல்லாம்
அவர்களின் குலத்தின் நன்மை/தீமை செயல்கள் மற்றும் அவர்களுடைய பாப புண்ணியம் தான் .

நம்மால் நம் குலத்தாரின் வினை செயல்களை அறிந்து கொள்ள காலம் இருக்காது,
சிலர் பல முயற்சிகள் எடுத்து பரிகாரம் செய்து கொள்வார்கள்,
அறிவுக்கு புலப்படத பல சம்பவம்கள் நம் வாழ்வில் நடந்தாலும் கர்வம் நம்மை அதைப்பற்றி சிந்திக்க விடாது ,

இதற்கு ஒரு பரிகார வழி
என்பது …..

உணவும் –ஜீவனமும் –ஒரே கோள் தான் .
வயிறும் –வருமானமும் –ஒரே கோள் தான் .
பசியும் –பதவியும்–ஒரே கோள் தான் ….

அகத்தியர் சுவடிகளில் சொல்கிறார் ஒரு ஒரு மனிதர்களுக்கும் 10 விதமான ஜீவனமும் 10 விதமான கர்மமும் உள்ளது, இதன் சாபம் தசகர்ம சாபம்
இதுவே ஆசியாக மாறினால் தசஜீவன யோகமாக மாறும் என்பார் .

இங்கே ஒரு கணக்கு –“பசி –வயிறு –உணவு “…இவை அவசியமான ஒன்று ….

படியளக்கும் பெருமாளே என்பார்கள் …
பெருமாள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மஹா விஷ்ணு அவதாரம் மட்டும் தான்,
ஆனால் பெருமாள் என்றால் முருகன் என்று பொருளும் உண்டு.

பெருமாளும் முருகனும் மனிதனின் பசியை போக்கும் சக்தி படைத்தவர்கள்,
சரியான உணவு சரியான நேரத்தில் நமக்கு கிடைகிறது என்றால் நாம் இவர்களின் ஆசிகளை பெற்று உள்ளோம் என்று அர்த்தம் .

நமக்கு சரியான பதவி கிடைக்கவில்லை என்றால் இவர்கள் நமக்கு ஆசிகள் கொடுக்கவில்லை என்று பொருள்.

இவர்களின் ஆசிகள் கிடைத்தால் நல்ல பதவி, வாழ்கையில் வருமானத்தில்
உயர்வு நிச்சியம் ஏற்படும் …..

நன்றி …

குறிப்பு ..சிவனை, விநாயகரை, அம்பாளை மற்றும் மற்ற தெய்வங்களை வழிபாடு செய்பவர்கள், மற்றும் மற்ற சமயத்தினர் நல்ல மேன்மையாக உள்ளார்கள் என்று கேள்வி வரும் ….

ஒரு தனி நபரின் சாபம், ஆசிகள், கர்மம்கள் மற்றவரிடம் மாறுபடும், மேலும் குலம், முன்னோர்கள் ஆசிகள் மாறுபடும் ….

“கர்மம் தீர்ந்தால் நல்ல பதவிகள் தெய்வத்தால் தரப்படும் இது சத்தியம் “

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =

Most Popular