சாபம் நீங்க மாதம் 2 முறை இப்படி குளிக்க வேண்டும்!

75

சாபம் நீங்க மாதம் 2 முறை இப்படி குளிக்க வேண்டும்!

ஒருவரால் பாதிக்கப்பட்டவர்கள் சாபம் விடுவார்கள். அப்படி அவர்கள் விடும் சாபம் உடனடியாக பலிக்கும். அந்தந்த தலைமுறையிலேயே அவர்களது சாபத்திற்கு உண்டான பலனை அனுபவித்துவிடுவார்கள். ஆனால், ஒரு சிலர் விட்ட சாபம் பல தலைமுறையையும் தாண்டி அவர்களது குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் தீராத கஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வரும்போது, வீட்டில் இருப்பவர்கள் ஜாதகம் பார்ப்பார்கள். அவர்கள் கட்டத்தை வைத்து சரியாக கனித்து விடுவார்கள். உங்களுடைய ஜாதகத்தில் தீர்க்க முடியாத சாபம் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பிரச்சனையும் வருகிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்கு உண்டான பரிகாரத்தையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். அதை நீங்கள் பின்பற்றலாம். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யலாம்.

இந்த பரிகாரத்தை செய்தால் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய சாபம் வந்தாலும், அதனை உடனடியாக சரி செய்யக் கூடிய சக்தி இதற்கு உண்டு. அதாவது இந்த பரிகாரத்தை உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த ஜென்மத்தில் செய்தால், உங்கள் குடும்பத்தை தொடரும் சாபம் இந்த ஜென்மத்தோடு முடிந்துவிடும். வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி இரண்டு பேரும் இந்த குளியலை மேற்கொள்ளலாம். அல்லது யாராவது ஒருவர் செய்தாலும் சரிதான். பெண் சாபம், விதவை சாபம், கர்ப்பிணி சாபம், பித்ருக்களின் சாபம், குலதெய்வ சாபம், என்று எந்த சாபத்திற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சாபம் விலக குளியல்:

இந்த பரிகாரத்தை மாதத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். அஷ்டமி திதி, நவமி திதி வரும் அல்லவா. அந்த 2 நாட்களில் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும். ஒரு சின்ன டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வெட்டிவேர், 1 சின்ன துண்டு பட்டை, கருஞ்சீரகம் 1 ஸ்பூன், போட்டு ஊற வைத்து விட வேண்டும். நாளை அஷ்டமி திதி என்றால், முந்தைய நாள் இரவே இந்த டம்ளர் தண்ணீரை தயார் செய்து விடுங்கள். இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களும் அந்த தண்ணீரில் ஊறட்டும்.

மறுநாள் காலை இந்த தண்ணீருக்கு உள்ளே இருக்கும் வெட்டிவேர், பட்டை துண்டு, கருஞ்சீரகம் எல்லாவற்றையும் வடிகட்டி எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரோடு கலந்து குளித்து விட வேண்டும். தலைக்கு தான் குளிக்க வேண்டும். முதலில் வழக்கம் போல நீங்கள் சோப்பு ஷாம்பு போட்டு வெறும் தண்ணீரில் குளித்து விடுங்கள். இறுதியாக கொஞ்சம் தண்ணீரை பக்கெட் பிடித்து எடுத்து, இந்த மூன்று பொருட்களை ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை அந்த தண்ணீரோடு கலந்து, இறுதியாக இந்த தண்ணீரை எடுத்து மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு இந்த குளியலை மேற்கொள்ளுங்கள்.

உங்களை பிடித்த சாபமெல்லாம் இதோடு போகட்டும் என்ற வார்த்தையை மனதிற்குள் சொல்லி குலதெய்வத்தை வேண்டி இந்த குளியலை மேற்கொண்டால் நிச்சயமாக உங்களை தொடர்ந்து வரும் சாபம் விலகும் என்பது நம்பிக்கை. இப்படி எத்தனை அஷ்டமி நவமி இந்த குளியலை மேற்கொள்வது. தொடர்ந்து 3 மாதத்திற்கு இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். உங்களுடைய பிரச்சனைகளின் போக்கு எப்படி இருக்கிறது? வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கிறதா. நல்ல காலம் பிறக்க ஏதாவது வழி தெரிகிறதா, என்று பாருங்கள். வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு நல்ல விடிவு காலம் பிறப்பதற்கு உண்டான வழி தெரிந்து விட்டால் மூன்றே மாதத்தில் இந்த பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.

இல்லை பிரச்சனை இன்னும் தீவிரமாகத் தான் இருக்கிறது எனும் பட்சத்தில் தொடர்ந்து உங்களுடைய கஷ்டங்கள் தீரும் வரை மாதத்தில் இரண்டு நாள் இந்த குளியலை மேற்கொள்வதில் எந்த தவறும் கிடையாது. நிச்சயமாக நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்தால் குடும்ப கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும்.