நீங்கள் மகர ராசியா? சிவன்மலை முருகன் கோயில்!
செவ்வாய் பகவான் தான் உங்களது கட்டிட ஸ்தானத்திற்கு அதிபதி. ஆனால், இவர் உங்களது ராசிநாதனான சனி பகவானுக்கு பகைவர். சொந்த வீட்டு ஆசை தாமதமாகி நிறைவேறும் வாய்ப்பு இந்த ராசிக்கு அதிகம். இவர்களது வீடு கட்டும் ஆசையானது 45 வயதிற்கு பிறகு தான் நிறைவேறும். அதனால், வாலிப வயதாக இருக்கும் போதே வீட்டு மனையாக வாங்காமல் அபார்ட்மென்டில் வாங்குவது நல்லது. நீங்கள் செய்யும் முதல் முதலீடு கட்டிய வீடாக இருந்தால் நல்லது.
எத்தனை சந்தர்ப்பம் கிடைத்தாலும் குறுக்கு வழியில் போய் வீடு வாங்க மாட்டீர்கள். அப்பா வழியில் சிறிய அளவாவது சொத்து இருப்பதை விரும்புவீர்கள். எப்போதுமே முக்கால் கிணறு தாண்டி மீண்டும் பின் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள். இதை வித்துவிட்டு அதை வாங்கலாமா, என்னவோ இந்த ஏரியா நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று அடிக்கடி கட்டிய வீட்டையே விற்கவும் துணிவீர்கள். வீட்டிற்குள் எத்தனை ஜன்னல் விஅக்க முடியுமோ அத்தனை வைத்து கட்டுவீர்கள்.
வீடு இருளோ என்று இருக்க கூடாது. ராசிநாதன் சனி பகவானும் வருவதால் குடிசை வாரிய வீடுகளும் அருகில் இருக்கும். வீட்டில் தலைவாசல் கிழக்கு, தென்கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதி ஊரின் கிழக்கு திசை நோக்கியும் இருந்தால் வளம் பெருகும். மேற்கொண்ட திசைகள் அதிகாரப் பதவிகளை அளிக்கும்.
மேற்கு பக்கவாசல் இருந்தால் அடிக்கடி ஏதேனும் உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவுகள் கொடுக்கும். தரை தள வீடு கிடைக்காததால் கூட குடியேறுங்கள். அதே போன்று கடற்கரை பகுதி உங்கள் குடியிருப்பு இடத்திற்கு அருகில் இருந்தால் உடனே வாங்குங்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமாக சுக்கிரன் வருவதால் மனைவி வழியிலும் கூட சொத்துக்கள் சேரும். உங்களின் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவரே மேஷச் செவ்வாய் ஆகும். மேலும் ராசியாதிபதியான சனி செவ்வாய்க்கு பகைவராக இருக்கிறார்.
செவ்வாய்க்கு அதிபதியாக முருகக் கடவுள் வருகிறார். சனி கடலுக்கு உரியதைப்போல சிறு குன்றுகளுக்கும் உரியவராவார். குன்றுகளுக்கு மேல் இருக்கும் முருகனை தரிசிக்கும்போது சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அந்த தலம் விளங்கும். அப்படிப்பட்ட தலமே சிவன்மலை ஆகும். இத்தலத்தின் மலை மீது முருகன் வீற்றிருக்கிறார். நான்கு யுகங்களுக்கும் முற்பட்ட தொன்மையான ஆலயமாகும். கோவையிலிருந்து 75 கி.மீ. தொலைவும், காங்கேயத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.