உங்கள் ராசியின் தனித்துவம் என்ன?
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதுவே தான் 12 இராசி மண்டலமாக கருதப்படுகிறது. அவை: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
மேஷம்:
ஆன்மிகம், வைராக்கியம், வெளிப்படை தன்மை, துணிச்சல் , நிறைவேற்றுதல், கீழ்படிதல், ஒழுங்குமுறை, ஏற்றுக் கொள்ளுதல், தேசநலன்.
ஜீரண மண்டலத்தின் ஆதாரம்.
ரிஷபம்:
பண்புடைமை, அஹிம்சை, காரணம் அறிதல், கருணை, இரக்கம் உணர்வு, அக்கறையுடன் நடந்து கொள்ளுதல், பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, துணையாக
சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்.
மிதுனம்:
ஆர்வம், வளைந்து கொடுத்தல், நகைச்சுவை, படைப்பிக்கும் கலை, வழிமுறை, எழுத்து கற்க பிரியம், காரணம், தந்திரமாக, புரிந்து கொள்ளுதல்
இந்த ராசி நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம்:
பிறர் நலம் பேணுதல், நன்மை செய்ய விரும்புதல், அறம், உதவுகின்ற, தயாராக இருப்பது, ஞாபகம் வைத்தல்,
தொண்டு செய்தல், ஞாபகசக்தி, மன்னித்தல்.
கடக ராசி ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம்:
வாக்குறுதி, சுதந்திரம், பொறுப்பு, ஒற்றுமை, தயாள குணம், ஒருங்கிணைத்தல், ஒத்துழைப்பு, இனிமை, பகிர்ந்து கொள்ளுதல்.
சிம்ம ராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி:
சுத்தமாயிருத்தல், அருள், தனித்திருத்தல், சுதந்திரமான நிலை, தனிநபர் உரிமை, தூய்மை, உண்மையாக, ஸ்திரத்தன்மை, நல்ஒழுக்கம்.
இந்த ராசி தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம்:
சமநிலை காத்தல், உள்ளத்தின் சமநிலை, நன்னெறி, நேர்மை, பாரபட்சமின்மை, மன உணர்வு, நடுநிலையாக இருத்தல், நியாயம், நீதி.
துலாம் ராசி சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம்:
சீரிய யோசனை, கவனமாக இருத்தல், கண்காணிப்பு, அறிவு நுட்பம், எச்சரிக்கையாக இருத்தல், சிந்தனை மிகுந்த, விழிப்புணர்வுடன் இருத்தல், பகுத்தரிதல், உள் உணர்வு.
விருச்சக ராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு:
லட்சியம், திடமான நோக்கம், உழைப்பை நேசிப்பது, நம்பிக்கையுடன், விடாமுயற்சி, சாத்தியமாகின்ற, நம்பிக்கைக்குரிய, உறுதி, ஊக்கத்துடன் முயற்சி.
தனுசு ராசி எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
மௌனம், கண்ணியம், சாந்த குணம், அடக்கம், அமைதி, சாதுவான, மீளும் தன்மை,
பொறுமை, செழுமை
நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம்:
பொது கட்டுப்பாடு, சுய அதிகாரம், புலனடக்கம், தற்சார்பு, திருப்தி, மரியாதை, கட்டுப்படுத்துதல், மதிப்புமிக்க, சுயமரியாதை
நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம்:
ஞானம், உருவாக்கும் கலை, சார்ந்திருத்தல், விருந்தோம்பல், முன்யோசனை, முன்னறிவு, நற்குணம், சந்தோஷம், நேர்மறை சிந்தனை
இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
