ஜாதகப்படி பெண்ணிற்கு எப்படிப்பட்ட கணவர் அமைவார் தெரியுமா?

365

ஜாதகப்படி பெண்ணிற்கு எப்படிப்பட்ட கணவர் அமைவார் தெரியுமா?

பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எத்தகைய கணவன் அமைவார் என்பதை உங்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் இருந்தால், அந்த பெண் தன் கணவனை மிகவும் நேசிப்பவளாக இருப்பாள்.

லக்கனத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் இருந்தால், அப்பெண்ணின் திருமணம் நல்லமுறையில் பெற்றோரால் பார்த்த மணமகனுடன் நடத்தி வைக்கப்படும். பெண்ணின் ஜாதகத்தில் 2-ம் பாவத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், அப்பெண்ணிற்கு காதல் திருமணம் நடைபெறும்.

அப்பெண்ணிற்கு வரப்போகும் கணவன் உறவினராக இருக்கக்கூடும். கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 3-ம் பாவத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், அப்பெண்ணிற்கு உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் வழியில் கணவர் அமைவார்.

லக்னத்திற்கு 3-ம் பாவத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாயுடன் சனியும் சேர்க்கை பெற்றிருந்தால், அப்பெண்ணை உறவினர்கள் பழித்துப் பேசுவார்கள். பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 4-ல் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு அமையும்.

மேலும் சனி ராகுவுடன் சேர்க்கைப் பெற்று இருந்தால் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரை கணவனாக அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் 5-ம் பாவத்தில் நின்றால், அப்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள்.

அந்த பெண்ணிற்கு திருமண வாழ்வு மகிழ்ச்சியானதாக அமையும். பெண்ணின் ஜாதகத்தில் 6-ம் பாவத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், அந்த பெண் தேர்ந்தெடுக்கும் வரனை கணவனாக வருவான். அந்த பெண் கணவனை மிகவும் நேசிப்பவளாக இருப்பாள். ஆனால் கணவனால் பல துன்பங்களை அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் நிலை ஏற்படும்.

பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் 7-ம் இடத்தில் இருந்தால், அப்பெண் காதல் திருமணம் செய்து கொள்வாள். ஏழாம் இடத்துடன் குரு அல்லது புதன் தொடர்பு கொண்டால் பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டு மகிழ்ச்சியான திருமணம் அமையும். ஒரு பெண்ணின் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் 8- ம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே அவளுக்கு வரப்போகும் கணவனை தேர்ந்தெடுப்பாள்.

ஆனால் அப்பெண் தேர்ந்தெடுத்த கணவனால் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை அமையும். கால தாமதமான திருமணம் நடைபெறும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ல் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் இருப்பது நல்ல அமைப்பாகும். அந்தப் பெண் சிறந்த கணவனை அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 10-ம் இடத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், உடன் பணிபுரியும் ஆண் மகனை, அந்தப் பெண்ணே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாள். அப்பெண்ணின் கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பார். அத்திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான வாழ்வாக அமையும்.

பெண்ணின் ஜாதகத்தில் 11-ம் இடத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் நின்றால், குடும்ப உறவுகளில் இருந்து கணவன் அமைவார். அப்பெண் பொன், பொருள், ஆடம்பரமான வாழ்வு ஆகியவற்றை பெற்று வாழக்கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 12-ல் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் நின்றால், அந்தப் பெண்ணே தனக்கு வரும் கணவரை தேர்ந்தெடுத்துக் கொள்வாள். 12ம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைக்கப் பெற்றால் பெற்றோர் ஆதரவு உண்டு. ஆனால் கணவனால் மகிழ்ச்சியற்ற நிலை ஏற்படும்.