Saturday, October 28, 2023
HomeHealthy Recipesசுவையான ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை செய்வது எப்படி?

சுவையான ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை செய்வது எப்படி?

சுவையான ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1. புளி – நெல்லிக்காய் அளவு,
2. மிளகாய் வற்றல் – 15,
3. கொத்தமல்லி விதை – ஒரு கைப்பிடி,
4. கடுகு – 3 ஸ்பூன்,
5. கடலைப்பருப்பு – கால் கப்,
6. உளுத்தம்பருப்பு – கால் கப்,
7. வேர்க்கடலை – கால் கப்,
8. கருப்பு எள்ளு – 2 ஸ்பூன்,
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு,
10. கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
11. கறிவேப்பிலை – சிறிதளவு,
12. உப்பு – தேவையான அளவு,
13. மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை விளக்கம்:

1. முதலில் புளியை சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விடவும்.
2. பிறகு ஊறிய புளியை கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. இப்போது வெறும் வாணலியில் கொத்தமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும்.
4. பின்பு, ஐந்து மிளகாய் வற்றலையும் வறுத்துக் கொள்ளவும்.
5. இரண்டு ஸ்பூன் வெந்தயத்தையும் வறுத்து கொள்ளவும்.
6. மிளகு கட்டி பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும்.
7. இப்போது வருத்த கலவைகளை ஆறவிடவும்.
8. ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்யவும்.
9. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை , மற்றும் மிளகாய்வற்றல் அனைத்தையும் தாளிக்கவும்.
10. பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து புளித்தண்ணீரை ஊற்றவும்.
11. மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
12. புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
13. நன்றாக சுண்டிய உடன் அடுப்பை நிறுத்தவும்.
14. இந்த புளியோதரைக்கு குறிப்பாக பச்சரிசி சாதம் தான் சுவையைத் தரும். எனவே, பச்சரிசி சாதத்தை வடித்துக் கொள்ளவும்.
15. சாதம் வெந்தவுடன் அதில் மஞ்சள் பொடி மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
16. அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சல் சேர்க்கவும்.
17. அரைத்த பொடியை அதில் இரண்டு ஸ்பூன் தூவவும்.
18. எல்லாவற்றையும் நன்றாக கலந்து உப்பு சரி பார்க்கவும்.
19. இப்போது சுவையான ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை தயார். இதை அப்பளம் மற்றும் வடகத்துடன் பரிமாறவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + eighteen =

Most Popular