நீர் உருண்டையுடன் சிதம்பரம் ஸ்பெஷல் கொத்சு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1. இட்லி அரிசி -1/4 கிலோ,
2. கடுகு -1 ஸ்பூன்,
3. உளுந்து – 1 ஸ்பூன்
4. கடலை பருப்பு -1 ஸ்பூன்,
5. பெருங்காயத்தூள் – சிறிதளவு ,
6. காய்ந்த மிளகாய் – 3,
7. கறிவேப்பிலை – இரண்டு கொத்து,
8. உப்பு – தேவையான அளவு,
9. ஒரு தேங்காயில் – பாதி (சிறிய சிறிய துண்டாக நறுக்கியது).
செய்முறை விளக்கம்:
• முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
• பின்னர் நான்கு மணி நேரம் ஊறவைத்த அரிசியை மிக்சியில் போட்டு கொரகொர என்று அரைக்கவும். பின் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
• வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கொள்ளவும். பின் அதில் மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு நன்கு வதக்கிய பின் பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
• பின்பு அதில் கடைசியாக பெருங்காயத்தூள், தேங்காய் போட்டு நன்கு வதக்கிய பின், கரைத்து வைத்த மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
• மாவு ஆரிய பின் மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டை உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
• இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு இட்லி தட்டில் உருண்டையாக உருட்டி வைத்த மாவை எடுத்து வைத்து அவிக்கவும்.
• 15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்க்கவும். சுவையான நீர் உருண்டை ரெடி.
சிதம்பரம் ஸ்பெஷல் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 3
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
தனி மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
புளி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
உப்பு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
1. கத்தரிக்காயினை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து பாத்திரத்தில் புளியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கி தனியா தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து அதனுடன் 2 கப் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் கத்தரிக்காய் கொத்சு ரெடி. இதனை நீர் உருண்டை யுடன் பறிமாறவும்.
