மணமணக்கும் செட் தோசையுடன் கார சட்னி செய்யலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – இரண்டு கப்,
புழுங்கள் அரிசி – ஒரு கப்,
முழு உளுத்தம் பருப்பு – முக்கால் கப்,
மெல்லிய அவல் – அரை கப்,
வெந்தியம் – ஒரு தேகரண்டி,
உப்பு – தேவையான அளவு ,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
பச்சரிசி, புழுங்கள் அரிசி, உளுத்தம் பருப்பு, அவல், வெந்தியம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, மாவாக அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும். எட்டு மணி நேரம் கழித்து கலக்கி திக்காக தோசை ஊற்றவும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளலாம். தேவையானால் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம். மெதுவான சுவையான செட் தோசை தயார். இந்த செட் தோசை க்கு ஏற்ற ஒரு சூப்பரான கார சட்னி செய்யலாம் வாங்க..
கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 30,
பூண்டு பல் – 10,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன்,
வர மிளகாய் – 5,
காஷ்மீரி மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு ,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய்யை விட்டு நன்கு காயவிட வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பருப்பு வகைகள் சிவக்க வறுபட்டதும் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாய் நிறத்திற்காக சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். இந்த சட்னிக்கு தக்காளி எதுவும் சேர்க்கத் தேவையில்லை எனவே வெங்காயத்தை மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
தொடர்ந்து நன்கு பூண்டு வாசனை போக வதக்கிக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு நன்கு வதங்கியதும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடுங்கள். இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி தழையை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
கொத்தமல்லி அதிகம் வதங்கி விடக்கூடாது. லேசாக வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில், ஆறிய இந்த பொருட்களை சேர்த்து தேவையான உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மணமணக்க சுவையான கார சட்னி ரெடி இதை செட் தோசை யுடன் பரிமாறவும்.