காரடையான் நோம்பு அன்று வெல்ல அடை மற்றும் உப்பு அடை எப்படி செய்வது?
வெல்ல அடை செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
காராமணி -அரை கப்,
தேங்காய் – அரை கப்,
வெல்லம்- முக்கால் கப்,
ஏலக்காய் – ஒரு டீஸ்பூன்,
தண்ணீர் – இரண்டு கப்.
செய்முறை விளக்கம்:
காராமணியை வறுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். “தள தள” என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்க வேண்டும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெல்ல அடை தயார்.
உப்பு அடை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- ஒரு கப்,
காராமணி -அரை கப்,
தேங்காய் – அரை கப்,
இஞ்சி -ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய்- இரண்டு ,
உப்பு – தேவையான அளவு,
எண்ணைய்- தேவையான அளவு,
தாளிக்க:
கடுகு- ஒரு டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு.
தண்ணீர் – இரண்டு கப்.
செய்முறை விளக்கம்:
காராமணியை வறுத்து வேகவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.எண்ணைய் விட்டு கடுகு,உ.பருப்பு தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை தூவிக்கொண்டே கிளற வேண்டும்.
மாவு நன்றாக வெந்த உடன், வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான உப்பு அடை ரெடி. இந்த வெல்ல மற்றும் உப்பு அடைகளை காரடையான் நோம்பு அன்று தெய்வேத்யம் செய்து இந்த ஸ்லோகத்தை சொல்லி மாங்கல்ய பலன் பெறலாம்.
காரடையான் நோம்பு ஸ்லோகம் :
‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன்.
மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’
என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.