தென்னையின் மருத்துவ பயன்களை அறிவோம்!
அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் தேங்காய், இளநீர் மட்டுமின்றி தென்னம்பூ, தென்னம்பாளை போன்றவற்றில் இத்தனை நன்மைகள் உள்ளதா! தென்னை மரத்தின் பயன்பாடுகளை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும் தென்னை மதத்திலிருந்து கிடைக்கும் தேங்காய் பயன்பாடுகள் இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம்.
தினமும் சமையலுக்கு அவசியம் பயன்படுத்தப்படுகிறது. தென்னை மரத்தின் பூ, இளநீர், காய், குருத்து, இதில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஆகியவை மருத்துவ பயனுடையது. இதன் இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்கவும், தாகத்திற்கும். பூ நரம்புகளுக்கு வலிமையை தருகிறது.
மாதவிடாய் கோளாறு நீங்க என்ன செய்யலாம்:
தென்னையின் கொத்தான பூக்களே தென்னம்பாளை என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிக பயன்தரக்கூடியது. பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் கோளாறு, பெரும்பாடு பிரச்சினைகளுக்கு தென்னம்பாளை அருமருந்து. மாதவிடாய் கோளாறு சரி செய்ய,
தென்னம்பூ – 5 கிராம், சீரகம் – 5 கிராம், சிறிது மஞ்சள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இருவேளை சாப்பிட மாதவிடாய் கோளாறு குணமாகும்.
இரத்த வாந்தி, சிலந்தி கடி குணமாக:
தென்னம்பாளையில் உள்ள சில பூக்களை எடுத்து வாயில் நன்றாக மென்று சாப்பிட இரத்த வாந்தி, சிலந்தி கடி, காய்ச்சல் ஆகியவை தீரும். இது போன்று 3 வாரங்களுக்கு பத்தியத்துடன் சாப்பிடலாம்.
குடல் புண்கள் ஆற்றுவதற்கு:
தென்னம்பாளை 100 கிராம் எடுத்து நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி அதனுடன் 100 கிராம் திரிபலா சூரணத்தை சேர்த்து கலந்து தினமும் இருவேளை 2 கிராம் அளவு உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர குடற்புண் குணமாகும்.
இளைத்த உடல் புஷ்டியாக:
தேங்காய், முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை ஒன்றாக அரைத்து அதில் சிறிது பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இளைத்த உடல் புஷ்டியாகும்.
சோரியாசிஸ் குணமாக :
• தேங்காய் – அரை மூடி
• அகத்திக்கீரை – 100 கிராம்
• வெட்பாலை அரிசி – 1 ஸ்பூன்
• கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
இவற்றை அனைத்தையும் தண்ணீர் விட்டு அரைத்து சரும நோய்கள் உள்ள இடங்களில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வர சரும நோய்கள் காணாமல் போகும்.
வயிற்று வலி குணமாக:
முற்றிய தேங்காயை துருவி பால் எடுத்து அதில் சம அளவு கரும்புச்சாறு சேர்த்து பருகிட வயிற்று வலி உடனே குணமடையும்.
இளநீர் பயன்பாடு:
இயற்கை நமக்கு கொடுத்த அற்புத வரம் தான் இளநீர், இளநீரை கொண்டே பல நோய்களை குணப்படுத்திவிடலாம். பல சித்த மருத்துவத்தில் விச முறிப்புகளுக்கும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீரில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற தாது உப்புகள் நிறைத்து காணப்படுகிறது.
குடல் புண், வயிற்று வலி, மலச்சிக்கல், உடல் எரிச்சல், பேதி, மூலம் ஆகிய நோய்களை இளநீர் குணப்படுத்துகிறது. மதியம் சாப்பாட்டிற்கு பிறகு இளநீர் சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் நீங்கும். உடல் உள்ளுறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் நல்ல பொலிவை தரும்.
