இவர் எல்லோரையும் போடா போடா என்று கூறியதால் இவரை போடா ஸ்வாமிகள் என்றும் அழைப்பார்கள்
கீழே உள்ள அவருடைய படம்அவருடைய திருக்கரங்களால் ஓருவருக்கு கொடுக்கப்பட்டு அதை அவர் அடியேனுக்கு கொடுத்தார். இதை அடியேன் தயாரித்துள்ள மகான்களின் ஆல்பத்தில் ஓட்டியுள்ளேன்
படத்தில் அவருக்கு பின் உள்ளது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம்
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும், அற்புதங்களும் நிகழ்த்திய சற்குரு சிவசாமி சித்தர். இவர் சமீப காலத்து சித்தர் என்பதால் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த அற்புதங்களை காஞ்சி மக்கள் பலர் அறிவர். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலும் காஞ்சிபுரம் தெருக்களிலும், ஒரு பிச்சைக்காரரைப் போலும், பித்தனைப் போலும் சுற்றித் திரிந்தார் சிவசாமி சித்தர்.
கருத்த தேகமும் வெள்ளைத் தாடியும், தீட்சண்ய பார்வையுமாக இருந்த சித்தர், உடலில் ஒரு
அழுக்கான கந்தல் ஆடையைச் சுற்றியிருப்பார். கைகளிலும், இடுப்பிலும் குப்பை கூளங்கள்
எப்போதும் இருக்கும், வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்துகொண்டிருக்கும். அது அவரது உடலில் இறங்கி வழிந்து கொண்டேயிருக்கும். சித்தரின் இந்தக்கோலம் அவரை சாதாரண மனிதர்கள் யாரும் நெருங்கிவிட கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் அவரது சீடர்களில் ஒருவரான இராமலிங்கம்.
சிவசாமி சித்தர் எப்போது காஞ்சிபுரம் வந்தார்,அவரோட சொந்த ஊர் எதுவென யாருக்கும் தெரியாது.
“சித்தர் காலையில் ஏகாம்பரநாதர் கோயிலிருந்து புறப்பட்டு ரிக்ஷாவில் ஓரிக்கைங்கிற
இடத்துக்குப் போவார். அங்கிருந்து பதினாறுகால் மண்டபத்தில் உட்கார்ந்து விட்டு, மறுபடியும் ஏகாம்பர நாதர்கோயிலுக்கு வருவார். வழியில் அவரை நெருங்கி தங்களோட பிரச்சனைகளைச் சொல்லி அவருடைய அபூர்வ சக்தியால் நிறையப் பேர் பயனடைந்துள்ளார்.
திரு கணேசன் சுந்தரேசன்அவர்கள் அனுப்பிய தகவல்
மஹா பெரியவா சொல்லி இவரிடம் ஒரு வெளிநாட்டு கார பக்தர் வந்தார் அந்த வெளிநாட்டு காரர் தன் பாஸ்போர்ட் வீசா பணம் போன்ற முக்கிய ஆவணங்கள் உள்ள பெட்டியை காஞ்சிபுரத்தில் தொலைத்துவிட்டார் அதை இவர் தன்னை சுற்றி உள்ள குப்பைகளை எல்லாம் எடுத்து அவருடைய இன்னொரு பொட்டியை பிடிங்கி அதில் போட வெள்ளை காரர் கடுப்பாகி சாமியிடம் இருந்த தன் பெட்டியை வாங்கி அதில் இருந்த குப்பைகளை கொட்ட அதிலிருந்து தொலைந்த ஆவணங்கள் அனைத்தும் விழுந்தன இதை கண்ட வெள்ளை காரர் காலில் விழுந்து கதறி தவறுக்கு மன்னிப்பு கேட்டு விடை பெற்றார் இதை நேரில் பார்த்த கருவூரார் சித்தர் வழித்தோன்றல் சித்தர் வழி மரபை கடைபிடிக்கும் ஓர் அடியார் என்னிடம் சொன்னார் இது போல் நிறைய பேரை ஸ்ரீமகாபெரியவா இவரை போய் பார்க்க சொல்லியிருக்கிறார்
1989–ம் ஆண்டு சமாதி நிலையடைந்த சித்தரின் சமாதி
காஞ்சிபுரம் மேற்குப்புறம் உள்ள மயான பூமியின் தொடக்கத்தில் சமாதி கோவிலிருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மயான பூமியை ஒட்டியோ,மயானபூமியுடன் சேர்த்தோ இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அளவற்ற சக்தி உண்டு.கீழே இருக்கும் சமாதிபடத்திலுள்ள பெயர் பலகையில்
ஸ்ரீமகாபெரியவா படம் உள்ளதைப்பாருங்கள்
